சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் பா. ரஞ்சித் சென்னையில் துவங்கி வைத்தார். இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் நல்ல இசையமைப்பாளரும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி வி பிரகாஷ். ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் ஒரு பாடகனாக தமிழ் திரையுலகில் கால் பதித்தவர். பின்னர் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து இவர் இசையமைத்த கிரீடம் படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. இது தவிர ஒரு நடிகனாகவும் பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வருபவர். கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் 2 மற்றும் சூர்யா நடிக்கும் 43 வது படத்திற்கும் இசையமைக்கிறார். சூர்யாவின் 43 வது படம், ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் ஆகும்.
ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடிக்கும் கள்வன், ரிபெல், இடி முழக்கம் உள்ளிட்ட படங்கள் உருவாகி ரிலீஸ் ஆக தயாராக வரும் நிலையில், தற்போது புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார். இதன் படப்பிடிப்பை பா. ரஞ்சித் துவங்கி வைத்தார். இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. ரஞ்சித்திடம் பணியாற்றிய அகிலன் மோசஸ் இயக்குகிறார். இதில் ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீ நாத்பாஸி, லிங்கேஷ் விஸ்வந்த், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இயக்குனர் பா.ரஞ்சித் தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்காக தொடர்ந்து படங்கள் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்
சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!
Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு
{{comments.comment}}