பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்

Mar 24, 2025,05:12 PM IST

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், மனைவி சைந்தவி இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் தனது பள்ளி தோழியான பின்னணி பாடகி சைந்தவி என்பவரை சிறுவயதில் இருந்து காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.


இந்த தம்பதிகள் இருவரும் சமீபத்தில் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் தெரிவித்தனர். இது சோசியல் மீடியாவில் கடும் வைரலானது. இவர்களின் 12 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் தற்போது மன கசப்பு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் பரஸ்பரமாக பிரியப் போவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல்  செய்துள்ளனர்.




இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக தெரிவித்தனர். ஆனால் இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே காரில் வந்து விவாகரத்து மனு கொடுத்துவிட்டு, பிறகு மீண்டும் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றுள்ளது அனைவரையும் சற்று யோசிக்க வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்