சர்வதேச மகளிர் தினம்.. ஜனாதிபதி முர்மு முதல் அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

Mar 08, 2024,12:12 PM IST

சென்னை: இன்று மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்கள்  மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:




அறிவியல்,  தொழில்நுட்பம், மருத்துவம்,  விண்வெளி,  விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்கள் புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர். இன்றும்,  பெண்கள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதனை நாம் தான் தீர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி:




"சர்வதேச மகளிர் தினம்" நம் பெண்களின் பல சாதனைகளால் இந்தியாவின் பெருமை கொள்கிறது.சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என கூறினார்.


முதல்வர் மு க ஸ்டாலின்:




மகளிர் உரிமையை நிலை நாட்டியதில் திராவிட இயக்க பங்களிப்பு நீண்ட வரலாற்றைக் கொண்டது.சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெரும் வரை நமது பயணம் தொடரும். பெண்கள் உரிமை மற்றும் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என கூறினார்.


முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:


இன்று மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன என கூறினார்.


தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்:




தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி, சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன். அனைத்து மகளிர்களுக்கும் எனது இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


மார்ச் - 8 மகளிர் தினமாக  இருப்பதை விட ஒவ்வொரு தினமும் மகளிருக்கான தினமாக இருக்க வேண்டும் என்பதே இன்று அனைவரும் விரும்புவது... இன்று பெண்கள் சிறப்பாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு முழுமையான தடையில்லாத அடிப்படைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, வரதட்சணை இல்லாத திருமணங்கள், கலைக்கப்படாத பெண் சிசுக்கள்,பாலியல் தொந்தரவு இல்லாத தொழில் நிறுவனங்கள், பாரபட்சமில்லாத வாய்ப்புகள்,சமுதாய களம் மட்டுமல்ல,மனதளவில் கூட பெண்கள் மீது மரியாதை முழுமையாக கிடைக்கிறதோ அதுவே மகளிர் தினம் என்பதே சரியானதாக இருக்கும் என கூறினார்.


டிடிவி தினகரன்:


மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று முழங்கிய மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு உதாரணமாக திகழும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.


தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை:


பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்பதில் காங்கிரஸ் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் மத்திய பாஜகஅரசோ மகளிருக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றி செயல்படுத்தாமல் கண் துடைப்புநாடகத்தை நடத்தி வருகிறது. பெண்கள் சமவாய்ப்பு பெறுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.


தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: 


பெண்கள், சவாலை வாய்ப்பாக கருதி தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும். குடும்பத்தினர் பெண் ணுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.


மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமலஹாசன்:




நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை.  அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வேன் என ஒவ்வொரு ஆணும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும். 


எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம். 


சாதிக்கத் துடிக்கும் பெண்கள் அனைவரையும் சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன் என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்