தாய்மாமன்  சீர் சுமந்து வாராண்டி.. ஆத்தாடி எத்தனை தட்டு.. 2 குதிரை வேறயா.. அசத்திட்டீங்களே மாம்ஸ்!

Feb 02, 2024,10:42 AM IST

திருப்பூர்: திருப்பூரில் பூப்புனித நன்னீராட்டு விழாவில் தங்கை மகளுக்கு 2 குதிரைகளுடன் 150 தட்டுகள் சீர் கொண்டு வந்து தாய்மாமன்கள் அசத்தியுள்ளனர்.


தமிழர்களின் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறை தாய்மாமன். இது தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். இன்று நேற்று இந்த  சீர்வரிசை கொண்டு வருவது நடக்கவில்லை.. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது இது. குழந்தைகளை தொட்டிலில் இடுதல், காது குத்துதல், பூப்பு சடங்கு, பட்டம் கட்டுதல் போன்ற காலங்களில் தாய்மாமன் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. 


தாய்மாமன் உறவிற்காக எவ்வளவோ பிரச்சனைகள் தமிழக மண்ணில் நடந்துள்ளன. தொன்று தொட்டு பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு தாய் மாமன் சீர் கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்று கொண்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டில் பூப்பு நன்னீராட்டு விழாவும் முக்கிய இடம் பெறுகிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அது முக்கியமானதாகவும் நம்ம ஊர் பாரம்பரியம் வைத்திருக்கிறது.




அந்தக் காலத்தில் மாட்டு வண்டி கட்டி அதில் சீர் கொண்டு வந்தார்கள். பிறகு காலப் போக்கில் எல்லாம் மாறிப் போய் விட்டன. ஆனால் சமீப காலமாக இந்த சீர் வரிசை தருவதை மீண்டும் கிராண்டாக செய்ய ஆரம்பித்துள்ளனர்.


லாரியில் சீர்வரிசை கொண்டு வருதல், மாட்டு வண்டியில் சீர்வரிசைக் கொண்டு வருதல் என ஊரையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு எல்லாம் நடக்கையில், திருப்பூர் காங்கேயத்தில் என்ன நடந்தது தெரியுமா? ஆமாங்க, அங்கு தாய்மாமன்கள்  2 குதிரைகளுடன் 50  தட்டுகளில் சீர்வரிசை கொண்டு வந்து அசத்தியுள்ளனர்.


திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த எஸ். பொன்ஹர்ஷிகா என்ற பெண்ணின் தாய்மாமன்கள் குதிரையில் ஏரி ஊர்வலமாக வந்து 150 தட்டுகள் மற்றும் இரண்டு குதிரைகளையும் சீர் வரிசையாக கொடுத்து அசத்தியுள்ளனர். மேளதாள முழக்கத்துடன் பழம் வகைகள், பூ வகைகள், தேங்காய், வாழைப்பழம், சாக்லெட், பொரி, அவுல் உள்ளிட்ட பொருட்களை 150 தட்டுகளில் வைத்து ஊர்வலமாக வந்து அசத்தியுள்ளனர்.


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

சனாதன சக்திகளை ஓங்க விட்டு விடாதீர்கள்.. திரைத்துறையினருக்கு திருமாவளவன் கோரிக்கை

news

மக்களவையில் முழங்க பிரியங்கா காந்தி தயார்.. வயநாடு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை!

news

வங்க கடலில் இன்று உருவாகிறது.. காற்றழுத்த தாழ்வு.. நாளை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

news

நவம்பர் 23 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

இன்று நிதானமாக செயல்பட வேண்டிய 2 ராசிக்காரர்கள் இவங்க தான்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

அதிகம் பார்க்கும் செய்திகள்