- சு.தா. அறிவழகன்
கெளதமிக்கு நல்ல காய்ச்சல்.. பார்வதிக்கு கவலையாகி விட்டது. ஜார்ஜுக்குப் போன் போட்டாள். அவன் ஓடி வந்தான்
"என்னாச்சு பார்வதி"
"நைட் சரியாவே சாப்பிடலை.. மிட்நைட்ல ஒருவாட்டி வாந்தி எடுத்தா.. இப்ப உடம்பு அனலா கொதிக்குது.."
"டேப்ளட் ஏதாச்சும் கொடுத்தியா"
"ம்ம்.. பாராசிட்டமால் கொடுத்தேன்.. பட்.. காய்ச்சல் குறையல"
"டாக்டர் கிட்ட போலாம்"
ஆட்டோ பிடித்து அருகில் இருந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு விரைந்தனர். டாக்டரைப் பார்க்க கெளதமியையும், பார்வதியையும் உள்ளே அனுப்பி விட்டு வெளியே அமர்ந்தான் ஜார்ஜ்.
என்னாச்சு இந்த நவீனுக்கு.. பெரிய குழப்பமா இருக்கே.. தலையை வலிப்பது போல உணர்ந்தான் ஜார்ஜ். கண்ணை மூடியபடி பின்னோக்கி சுவரில் சாய்ந்தபடி அமர்ந்தான். செல்போன் சிணுங்கியது.
"ஹலோ"
"....."
"எஸ்.. சார்.. மே ஐ நோ ஹூ இஸ் திஸ்?"
"....."
"ஓ.. எப்போ சார்.. வென் சார்?"
"....."
"ஓ.. ஓகே. யுவர் நேம்?.. ஓகே.. தேங்க்ஸ்.. ஐ வில் கால் யு பேக் அகைன்"
பட்டென்று கண்ணில் நீர் கொப்பளித்தது.. உடம்பெல்லாம் சூடாவதைப் போல உணர்ந்தான். உட்கார முடியவில்லை. சட்டென்று சீட்டை விட்டு எழுந்தான். பதட்டமாக நடை போட்டான்.. செல்லை எடுத்து பார்வதியை அழைத்தான்.
"உடனே வெளியே வா.. நீ மட்டும்"
பதட்டமாக வந்தாள் அவள்.
"என்னாச்சுடா.. ஏன் இவ்ளோ பதட்டம்"
"திருவனந்தபுரத்துல இருந்து போன். நவீன்னு உங்களுக்கு யாரையும் தெரியுமான்னு கேட்டு பேசினாங்க"
"வாட்.. யாரு பேசினா?"
"நாராயணன்னு ஒருத்தர்.. அவனுக்கு என்னாச்சுன்னு கேட்டேன்.. உடனே கிளம்பி வர முடியுமா, நேர்ல பேசிக்கலாம்ன்னு சொன்னார்"
"என்ன சொல்ற.. பேசினது யாரு.. என்ன விஷயம்.. நவீனுக்கு என்னாச்சு.. நீ கேக்கலியா"
"கேட்டேனே.. நேர்ல வாங்க சார்.. போனில் பேச முடியாத விஷயம்னு சொல்றான் அந்தாளு"+
"போன்ல பேச முடியாத விஷயம்ன்னா.. புரியலையே.. பேசுனது போலீஸா.. கேட்டியா அதை.. என்னடா இது குழப்பத்துக்கு மேல குழப்பமா இருக்கு.. இதை இவ கிட்ட எப்படி நாம கன்வே பண்ண முடியும்.. கடவுளே"
"எதையுமே அந்த ஆளு சொல்லலை.. சொல்லிட்டு போனை வச்சுட்டார்.. இவ கிட்ட எதுவுமே சொல்லாத.. இப்படி ஒரு போன் வந்ததே அவளுக்குத் தெரிய வேணாம்.. நான் கிளம்பிப் போய் என்னான்னு பாக்கறேன்.. அங்க போய் என்ன விஷயம்னு தெரிஞ்சிக்கிட்டு போன் பண்றேன்.. அதுக்குப் பிறகு முடிவு பண்ணலாம்.. சரியா"
"ம்.. பட் இவளை எப்படி நான் சமாளிப்பேன்.. கேள்வியா கேட்டு உசுரை எடுத்துருவாளே"
"எப்படியாவது சமாளி.. முடியலைன்னா அவங்க அப்பாவுக்கு போன் போட்டுரு.. அவர் கிட்ட விஷயத்தை சொல்லிடலாம்.. வேற வழியில்லை"
"எனக்கு ஒன்னுமே புரியலை.. நவீனுக்கு என்னடா ஆயிருக்கும்.."
"எனக்கும் தான் புரியலை.. ஆனா... அவனுக்கு என்னவோ ஆயிருச்சுன்னு மட்டும் தெரியுது.. பட் ஒரு பயலும் தெளிவா பேச மாட்டேங்கிறான். ஒரே மர்மமா இருக்கு.. ஏதோ திகில் படம் பார்த்த மாதிரியே எனக்கு ஃபீல் ஆகுது.. நாம கொஞ்சம் சீரியஸா இறங்கணும்.. ஒருவேளை ஏதாவது பிராப்ளத்தில் அவன் சிக்கியிருந்தா அவனை நாம காப்பாத்தியாகணும்"
"சரி முதல்ல இங்க இருந்து கிளம்புவோம்.. மத்ததை அப்பறம் பேசிக்குவோம்.. அந்தாளுக்குப் போன் பண்ணி நீ வர்றதை முதல்ல கன்வே பண்ணிடு"
"எஸ்.. நீ கெளதமியை பாரு.. நான் முதல்ல போறேன்.. குமாரைப் பிடிக்கணும்.. அவனையும் கூட்டிட்டுப் போலாம்னு பாக்கறேன்.. அவனுக்கு மலையாளம் தெரியும்.. ஸோ, யூஸ் ஆவான்"
"குட் ஐடியா.. அப்படியே பண்ணு.. பட் நீ பாட்டுக்கு அப்படியே கிளம்பிப் போயிடாத.. இவ கிட்ட ஏதாவது சொல்லிட்டு பிறகு போ.. என்னால இவ புலம்பலை சமாளிக்க முடியாது, கொன்னு எடுத்துருவா"
"சரி நீ முடிச்சுட்டு வீட்டுக்குப் போய்ரு.. நான் குமாரைப் பார்த்துட்டு உங்க வீட்டுக்கு வர்றேன்.. அப்பறம் பேசிக்கலாம்"
வெளியே ஓடினான் ஜார்ஜ்.. தலை சுற்றி விழாத குறையாக டாக்டர் அறைக்குள் நுழைந்தாள் பார்வதி.
--
வழக்கமாக அரட்டையடிக்கும் டீக்கடையில் போய் வண்டியை நிறுத்தினான் ஜார்ஜ். இருந்த டென்ஷனுக்கு ஒரு "பாக்கெட்"டை அப்படியே ஊதுனாலும் கூட பத்தாது.. அப்படி ஒரு பதட்டம்.
"அண்ணா... டீ"
பற்ற வைத்துக் கொண்டே குமாருக்கு போனைப் போட்டான். செல் ஸ்விட்ச்ட் ஆப்.
அடங்கொ.. செல்லை ஆப் பண்ணிட்டு என்ன பண்றான்... அவன் தம்பிக்கு போனைப் போட்டான்.
"சொல்லுண்ணா"
"டேய் குமார் என்னடா பண்றான்.. போன் ஸ்விட்ச் ஆப்னு வருதே"
"தூங்கறாண்ணா.. செல் சார்ஜ் போட்ருக்கான் போல.. இரு எழுப்பறேன்"
விநாடிகள் வேகமாக கரைய.. குப் குப் என்று வேகமாக விட்ட புகையில் அந்த இடமே "மூழ்கியது".. பக்கத்தில் நின்றிருந்தவர்கள் தெறித்து ஓடும் அளவுக்கு.
"சொல்லுடா"
"டேய்.. உடனே திருவனந்தபுரம் போகணும்.. ரெடியாகு"
"அங்க எதுக்கு"
"ஒரு போன் வந்துச்சு.. நவீன் பத்தி பேசணும்.. வாங்கன்னு சொல்லி.. ஒன்னும் புரியலை.. அவனுக்கு ஏதோ ஆயிருச்சு போல.. போய்ட்டு வந்துடலாம்.. என்ன சொல்ற"
"நவீன் பத்தியா.. யாருடா அது.."
"மொதல்ல நீ நம்ம கடைக்கு வா.. நேர்ல பேசலாம்"
"பத்து நிமிஷத்துல வர்றேன்"
போனை வைத்த நவீன்.. வாங்கிய டீயை அப்படியே விழுக்கென்று வாயில் ஊற்றி காசை கொடுத்து விட்டு அங்கிருந்த மரத்தடியில் போய் அமர்ந்தான்.. சற்று நேரத்தில் குமார் வந்து சேர்ந்தான்.
"யார்டா போன் பண்ணா.. என்னாச்சு அவனுக்கு.."
"யாரோ நாராயணனாம்.. உடனே வாங்க பேசணும்னு சொல்றான்.. பட் டீட்டெய்ல் சொல்லலை"
"போலீஸா.."
"அப்படீன்னா போலீஸ்ல இருந்து பேசறோம்னுதானே ஆரம்பிச்சிருப்பாங்க"
"ஆமால்ல.. சரி என்ன பண்ணலாம்"
"போய்ட்டு வரலாம்.. என்னாச்சுன்னு தெரியணுமே.. அவன் எதுலேயோ மாட்டியிருக்கான் போல.. மீட்டாகணும் அவனை.. கெளதமிக்கு வேற கடுமையான காய்ச்சல்... ரொம்ப வீக்காகிட்டே போறா"
"காய்ச்சலா.."
"ஆமா.. டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனப்பதான் போன் வந்துச்சு.. சரி.. நீ போய் ஊருக்குப் போறதுக்கு ரெடியாகு.. அப்படியே டிரெய்ன்ல டிக்கெட் இருக்கான்னும் பாரு.. இல்லாட்டிபிளைட்ல செக் பண்ணு.. எவ்வளவு சீக்கிரமா போக முடியுமோ போகணும். நான் பார்வதி வீட்டுக்குப் போய்ட்டு.. கெளதமிகிட்ட சொல்லிட்டு கிளம்பி வர்றேன்.. அவ கிட்ட இதுக்காக போறோம்னு சொல்ல வேண்டாம்.. போய் பார்த்துட்டு எப்படி சொல்லாம்னு முடிவு பண்ணிக்கலாம்"
"ஓகே.. மச்சான்.. போன் பண்ணு"
"சரி"
இருவரும் கிளம்பியபோது.. ஜார்ஜின் செல் அதிர்ந்தது.
"ஹலோ.."
"...."
"என்னாச்சு...?"
(தொடரும்)
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}