"போய்யா போய்யா கொய்யாலே...  உனக்கெல்லாம் ரசனையே கிடையாதுய்யா".. (கெளதமியின் காதல் -8)

Jan 29, 2024,06:06 PM IST

"எப்படி சொல்றே"


"ஹாஸ்பிட்டலுக்கு நேரில்தான் போக முடியாது.. உள்ளே  விட மாட்டாங்க.. லாஜிக் இருக்கு.. ஆனால் ஹாஸ்ப்பிட்டல் பேர் கூட சொல்ல மாட்டேங்குறாரே.. போன் நம்பர் கூட தர மாட்டேங்குறாரே.. அது ஏன்? அது இடிக்குதே"


"உண்மைதான்.. ஏதோ மறைக்கிறாங்கன்னு தெரியுது" ஆமோதித்தான் ஜார்ஜ்.


முகத்தை துடைத்துக் கொண்டு கெளதமி எழுந்தாள்..


"அண்ணா நான் போய் அவர் கிட்ட திரும்ப பேசுறேன்.. கெஞ்சிக் கேட்கிறேன். எப்படியாவது அட்ரஸ் வாங்கிட்டு வர்றேன்.. நீங்க வெயிட் பண்ணுங்க"




அவளை தடுக்கவில்லை ஜார்ஜ்.. கெளதமி திரும்ப ரகுநாதன் இருப்பிடம் நோக்கி போனாள்.. மற்றவர்கள் அவளுடன் நடந்து குறிப்பிட்ட தூரம் வரை போய் விட்டு கண்ணுக்கு எட்டும் தொலைவில் நின்று கொண்டனர். கெளதமி உள்ளே போனவள் நீண்ட நேரம் வரவில்லை. நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. ஒரு வழியாக வெளியே வந்தாள் கெளதமி.. அவளது முகத்தில் சற்று நிம்மதி தெரிந்தது.


"அண்ணா அவர் கிட்ட பேசிட்டேன். நம்பர் தரக் கூடாதுன்னு ஹாஸ்ப்பிட்டல் ரூல்ஸ்மா. அதான் தர முடியலை.. நான் வேணும்னா ஹாஸ்பிட்டலுக்குப் போன் போட்டுத் தர்றேன்.. நீயே பேசும்மான்னு சொன்னார். அதே மாதிரி போட்டுக் கொடுத்தார். அங்க ஒரு லேடி பேசினாங்க. நவீனும், அவரோட அம்மாவும் இங்கதான் இருப்பதாகவும், ட்ரீட்மென்ட் முடிஞ்சுதான் வெளியே வருவாங்கன்னும் சொன்னாங்க. யாரும் உள்ளேயும் உள்ளே இருந்து வெளியேயும் செல்போன் பேச முடியாதுன்னும் சொன்னாங்க. இன்னும் 15 நாள்ல நவீன் வெளியே வந்துருவார்னும் சொன்னாங்க.. இப்போ என்ன பண்ணலாம்?"


"நம்மளை பேசக் கூடாதுன்னு சொல்றார். ஆனால் அவர் மட்டும் எப்படிப் பேசினார்?" குமாருக்கு வந்த டவுட் இது.


"அதையும் நான் கேட்டேனே. அதுக்கு அவர் சொன்னார், நான் இந்த ஹாஸ்ப்பிட்டலோட ரெகுலர் கிளையன்ட் மா. அதான் பேசுறாங்க. புதுசா வர்றவங்க கிட்ட அவ்வளவு சீக்கிரம் பேச மாட்டாங்க. தகவலும் தர மாட்டாங்கம்மா அப்படின்னு சொல்றார்"


"சரி கெளதமி.. இப்ப நீதான் முடிவெடுக்கணும்.. என்ன பண்ணலாம்.. இங்கேயே இருப்பதும் வேஸ்ட்.. அங்கேயும் போக முடியாது. பேசாம ஊருக்குப் போயிடலாம்.. 15 நாள்தானே.. முடிஞ்சதும் அவனே போன் பண்ணப் போறான்.. இல்லாட்டி இவங்க எல்லோருடைய போன் நம்பரும் நம்ம கிட்ட இருக்கு. போட்டு தெரிஞ்சிக்கிட்டு தேவைப்பட்டா திரும்ப வரலாம்.. என்ன சொல்றே"


"எனக்கும் அதுதான் சரின்னு தோணுது"


"ஓகே.. ரிலாக்ஸ் ஆகு அப்போ.. நவீன் நல்லாதான் இருக்கான். ஹாஸ்ப்பிட்டல் மூலமாகவே அதை நாம உறுதிப்படுத்திட்டோம்.. இனி கவலை இல்லை.. அவன் வந்துரட்டும்.. அப்புறம் வச்சுக்கலாம் அவனுக்கு கச்சேரியை.. இன்னிக்கு நைட்டே ஊருக்குக் கிளம்பலாம்"


ஜார்ஜ் சொல்லச் சொல்ல அனைவரும் சரி என்றனர்.. ஆனால் கெளதமிக்கு மட்டும் இன்னும் எதுவோ உறுத்தலாக இருந்தது. நவீன் ஏன் திடீர்னு இப்படிப் போனான்.. என்னதான் அம்மாவுக்கு முடியாவிட்டாலும் கூட ஒரு போன் கூட பண்ணத் தோணலையா அவனுக்கு.. ஹாஸ்பிட்டலுக்குள் போவதற்குள் எத்தனை தடவை கால் செய்திருக்கலாம். ஏன் ஒரு தடவை கூட கால் பண்ணலை.. நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்வதற்குள் எத்தனை தடவை செய்திருக்கலாம்.. ஏன் பண்ணலை.. கேள்விகள் தலையைக் குடைந்து குடைந்து எடுத்தன.. எதற்குமே விடை தெரியவில்லை.


மீண்டும் மீண்டும் அழுகைதான் வந்தது. ஆனால் அந்தக் கண்ணீருக்கும் விடை இல்லை. சோர்வுடன் ஹோட்டலுக்குத் திரும்பினார்கள். தனது அறைக்கு வந்து கதைப் பூட்டிக் கொண்டு விழுந்தாள் கெளதமி.. கொஞ்ச நேரம் தூங்க முயற்சிப்போம்.. மனசு நிலை பெறட்டும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு கண்களை மூடினாள்.


---


எல்லோருக்கும் நாட்கள் ஓடின.. கெளதமிக்கு மட்டும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் போல தோன்றியது.  15 நாட்களையும் 15 விநாடிகளில் கழித்து விட முடியாது என்று ஏங்கினாள். படிப்பு சுத்தமாக தலையில் ஏறவில்லை. பார்வதிதான் கல்லூரியில் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி கெளதமியை தனது வீட்டுக்குக் கூட்டி வந்து பக்கத்திலேயே வைத்துக் கொண்டாள்.


சரியாக சாப்பிடுவதில்லை, சரியாக தூங்குவதில்லை. படிப்பிலும் நாட்டம் இல்லை.. எப்போதும் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள் நவீன் திரும்பக் கால் பண்ணுவானா என்ற எதிர்பார்ப்பிலேயே ஒவ்வொரு நாளும் கழிந்தது. அவனது எண்ணுக்கு நூற்றுக்கணக்கில் தினசரி போன் செய்தாள். போன் ஆஃப் ஆனதுதான்.. திரும்ப ஆன் ஆகவே இல்லை. 


பழைய நினைவு ஒன்று வந்தது..


ஒரு முறை நவீன் அவளை லன்ச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தான்.. ரொம்ப சந்தோஷமாக கிளம்பி விட்டாள்.. நவீனுக்குப் பிடிக்குமே என்று புடவையில் வந்திருந்தாள். அவளை புடவையில் பார்த்த நொடியிலேயே மயங்கிப் போய் விட்டான் நவீன்.. அம்சமா இருக்காளே என்று மனசுக்குள் கிச்சுக்கிச்சு விளையாடியது காதல் பட்டாம்பூச்சி. இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஒரு "கிரிப்"பாகவே இருந்தான்.


"ஏய்.. நல்லாருக்கா புடவை.. சொல்லு மேன்"


"புடவை மட்டும் நல்லாருக்கு"


"ஓய்.. அப்போ நானு"


"நீ கொஞ்சம் சுமார்தாம்மா.. ஏதோ புடவை புண்ணியத்தாலே.. ஓகேன்னு சொல்லுற அளவுக்கு இருக்கே"


"போய்யா போய்யா கொய்யாலே...  உனக்கெல்லாம் ரசனையே கிடையாதுய்யா.. உன் கூட டூ"


"சரி சரி கோச்சுக்காதே.. நீதான் டக்கரா இருக்கே.. போதுமா.. என்னோட டாப்பே ஆடிப் போச்சுன்னா பாத்துக்கயேன்"


"அப்படி வா வழிக்கு.. அதானே பார்த்தேன்.. என்னடா இது.. இவ்வளவு அழகா வந்திருக்கோம்.. இவன் இப்படிச் சொல்றானேன்னு நானே கன்பியூஸ் ஆயிட்டேன்.. அப்ப சரி அப்ப சரி"


"சரி நான் திடீர்னு காணாம போய்ட்டா என்ன செய்வே"


"செருப்பால அடிப்பேன்"


"யாரை??"


"உன்னைத்தான்"


"காணாமல் போன பிறகு எப்படி அடிப்பே"


"ம்ஹூம்.. இப்படியே பேசிட்டிருந்தா செருப்பால அடிப்பேன்னு சொன்னேன்"


"ஹலோ.. கொஞ்சம் மரியாதையா பேசலாம்ல"


"நீ லூசு மாதிரி பேசுனா எப்படிடா மரியாதை கொடுக்க முடியும், இடியட்.. இனிமேல் இப்படிப் பேசாதே.. சரியா.. ஸாரி"


"ஸாரி எதுக்கு"


"செருப்பால அடிப்பேன்னு சொன்னதுக்கு"


"2 வாட்டி சொன்னியே"


"சரி.. 2 ஸாரி"




"நீ சாரி கட்டிட்டு வந்த நேரம் சரியில்லை போல.. சரி அதை விடு.. நிஜமாவே கேட்கிறேன்.. காணாமப் போய்ட்டா என்ன செய்வே"


"ஏன் நவீன் இப்படிப் பேசறே... நீதான்டா என்னோட உலகம்.. நீ இல்லாம எப்படி நான் இருக்க முடியும்.. சொல்லு.. நீ காணாமப் போய்ட்டா நானும் காணாமப் போய்ருவேன்டா.."


"நீ காணாமப் போய்ட்டேன்னு எனக்கு எப்படித் தெரியும்"


"காணாமப் போன பின்னாடி என்னை பத்தி யார் கிட்டயாவது தெரிஞ்சுக்க மாட்டியா.. அப்ப தெரிஞ்சுக்க"


"அடியே அரை லூசு.. நான் காணாமப் போய்டுவேன்னு சொன்னது கண்ணாமூச்சி ரே ரே காணாமப் போறது இல்லை.. இந்த உலகத்தை விட்டே போயிட்டேன்னு அர்த்தம்"


"அட முழு லூசு.. நீ உலகத்தை விட்டுக் காணாமப் போயிட்டா.. நான் மட்டும் இருந்து என்னடா கிழிக்கப் போறேன்.. நானும் உலகத்தை விட்டே போயிருவேன்டா"


"இது டேஞ்சரான டீலிங்கா இருக்கே.. சரி சரி இரண்டு பேரும் காணாமப் போக வேண்டாம். இப்படியே பேசிட்டே இருப்போம்... சரியா"


"இப்படியே பேசிட்டேதான் இருப்பியா கடைசி வரைக்கும்..."


"ஆமா.. வேற.. அடிப்பாவி.. பயங்கரமான கேடிதான் நீ"


"ஹாஹாஹாஹாஹாஹா"..  கெளதமிக்குள்ளும் ஒரு "கமல்" இருப்பதை நவீன் கண்டுபிடித்த நாள் அது.


வெளியில் போன குல்பி ஐஸ் பையன் கொடுத்த குரலில் நினைவு கலந்து நிஜ உலகுக்கு வந்தாள் கெளதமி.. அழுது அழுது கண்களில் கண்ணீர் வற்றியே போய் விட்டது. இப்போதெல்லாம் அழுவதற்குக் கூட தெம்பில்லை  அவளுக்கு.. நாட்கள் ஓடியதே தவிர ஒரு ஆறுதலும் கிடைக்கவில்லை. 15 நாட்களும் ஓடி விட்டது.. எந்த தகவலும் இல்லை.


(தொடரும்)

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்