"ரிலாக்ஸ்.. பெரிய கிரைம் நடந்திருக்கு.. திட்டம் போட்டு பண்ணிருக்காங்க".. (கெளதமியின் காதல் - 24)

May 21, 2024,10:36 AM IST

- சுதா. அறிவழகன்


"என்னாச்சு ஜார்ஜ்.. யார் போன்ல?"


"போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசறாங்க.. நவீன் தொடர்பாக  2 பேரை பிடிச்சிருக்காங்களாம்"


"நவீன் தொடர்பாகவா.. யாராம்.. எப்போ"


"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி .. வேற டீட்டெய்ல் சொல்லலை.. அதுல ஒருத்தன் நம்மளைத் தெரியுனும் சொல்றானாம்.. நான் போய் பார்த்துட்டு வந்துரவா.. நீ இங்கேயே கெளதமி கூட இரு"


ஜார்ஜ் சொல்லச் சொல்ல பதட்டமானாள் பார்வதி.. அவளுக்குள் பொறி தட்டியது.


"ஜார்ஜ் இந்த விவகாரம் முடியப் போகுதுன்னு நினைக்கிறேன்.. நீ போய்ட்டு வா.. நான் இவ கூடவே இருக்கேன்.. போய்ட்டு எனக்கு அப்டேட் பண்ணு.. See, அவன் உன் பேரை சொல்லியிருந்தாலும் கூட நான் உன்னை நம்புவேன்.. யார் பெயரைச் சொன்னாலும் நான் உங்க கூடத்தான் இருப்பேன்.. காரணம், இது மிஸ்லீடிங்.. நீயும் அதைப் புரிஞ்சுக்கோ.. ஸ்டெடியா இரு..  வேற என்னவோ பெருசா மாட்டிருக்குன்னு நினைக்கிறேன்.. தைரியமா போய்ட்டு வா"


"தேங்க்ஸ் பார்வதி.. " நெகிழ்ச்சியுடன் பார்வதியைப் பார்த்து விட்டு வேகமாக கிளம்பினான் ஜார்ஜ்.


காவல் நிலையம்.


வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்தான் ஜார்ஜ். அவனது பார்வை இன்ஸ்பெக்டரைத் தேடியது. அறைக்குள் அவர் இருப்பது போல தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டுமே இருந்தார். அவரிடம் சென்று, "சார் எனக்கு போன் வந்தது.. நவீன் தொடர்பா.."


"ஓ.. அது நீங்கதானா.. கொஞ்சம் இருங்க.. விசாரணை போய்ட்டிருக்கு.. இன்ஸ்பெக்டர் இப்ப வந்துருவார்.. உட்காருங்க"




"ஓகே சார்.. சார் யார் சார் பிடிபட்டிருக்கா.. தமிழ்க்காரங்களா, மலையாளிகளா சார்?"


"ரெண்டும் கிடையாது.. தெலுங்கு பேசறாங்க"


"தெலுங்கா.. ஏதாவது விவரம் சொன்னாங்களா சார்?.."


"இப்பத்தானே கேரளா போலீஸ் ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிருக்கு.. கக்கிருவாங்க"


அதற்கு மேல் என்ன கேட்பது என்று தெரியாமல் இருக்கையில் அமர்ந்தான் ஜார்ஜ். தெலுங்கு பேசறவங்களுக்கும், நவீனுக்கும் என்ன தொடர்பு இருக்கும்.. ஒன்னுமே புரியலையே.. மனசுக்குள் ஆயிரம் கேள்விகள், பல்லாயிரம் குழப்பங்கள் சுழற்றியடித்தன. கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிந்த நிலையில் ஒரு அறைக் கதவு திறந்தது.. 3 போலீஸார் வெளியே வந்தனர். அத்தனை பேர் கையிலும் லத்தி.. அதன் பிறகு இன்ஸ்பெக்டர் வந்தார். "பயங்கரமான" விசாரணையாக இருந்திருக்கும் போல.. அத்தனை பேரும் வியர்த்து விறுவிறுத்துப் போய் வந்தனர்.


இன்ஸ்பெக்டர், ஜார்ஜைப் பார்த்ததும்.."உள்ளே வாங்க" என்று சைகை காட்டி தனது அறைக்கு நுழைந்தார்.


வேகமாக எழுந்து உள்ளே போனான் ஜார்ஜ்.


இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்ததும், ஜார்ஜையும் அமரச் சொன்னார்.


"சார் என்னாச்சு சார்.. யார் சார் இவங்க"


"ரிலாக்ஸ்.. மிகப் பெரிய கிரைம் நடந்திருக்கு.. திட்டம் போட்டு பண்ணிருக்காங்க.. இப்பத்தான் டீட்டெய்ல்ஸ் கிடைச்சது"


"அய்யோ.. இதுல எங்க பேரு எப்படி சார் வந்துச்சு.. சத்தியமா எனக்கு ஒன்னுமே புரியலை"


"எங்களுக்கும் முதல்ல புரியலை.. பிறகு இப்போ விசாரணை நடத்தின பிறகுதான் தெளிவாச்சு. அவனுக டைவர்ட் பண்ண முயற்சி பண்ணிருக்காங்க.. உங்களுக்கு இதுல தொடர்பு இல்லை.. ஸோ ரிலாக்ஸா இருங்கா"


"ஓ.. தேங்ஸ் சார்.. சார் நவீனுக்கு என்னாச்சு சார்.. அதை முதல்ல சொல்லுங்க சார்.. ரொம்ப பதட்டமா இருக்கு"


"பொறுங்க பொறுங்க.. இது ஒரு drug trafficking கேங். இப்ப சிக்கியிருக்கிற இந்த இரண்டு பேரும் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்தவங்க. இவங்க கூலிப் படையைச் சேர்ந்தவங்க. இந்தக் கூலிப் படையில நூத்துக்கணக்கான ஆட்கள் இருக்காங்களாம். நேஷனல் லெவல்ல கடத்தல், சேல்ஸ், பண்ணிட்டு இருக்காங்க. இந்தக் கூலிப்படைக்கு ஏதாவது உத்தரவு வரும்.. அதை செயல்படுத்துவது மட்டும்தான் இவங்களோட வேலை. பெரும்பாலும் எதிரிகளை கடத்துவது, மிரட்டுவது, அடித்து உதைப்பது.. பணம் பறிப்பது, தேவைப்பட்டால் ஆளையே காலி செய்வது.. இதுதான் இவங்களோட வேலை.. இந்தக் கும்பலைச் சேர்ந்தவங்கதான் நவீனைக் கடத்தியிருக்காங்க"


"நவீனை இந்தக் கும்பல் ஏன் கடத்தணும்.. அவனுக்கும் போதைப் பொருளுக்கும் என்ன சம்பந்தம் புரியலையே சார்"


"ஹலோ.. போதைப் பொருளுக்கு எதிரானவங்களைத்தான் இவங்க கடத்துவாங்கன்னு சொன்னேனே.. அப்படித்தான் நவீனை இந்தக் கும்பல் கடத்திருக்கு.. விரிவா சொல்றேன்.. சென்னைல கேசவ் அப்படிங்கிற ஒரு டிரக் மாபியா இருக்கான். அவன் ஒரு பெரிய நெட்வொர்க்.. காலேஜேஸ், ஸ்கூல்ஸ், ஐடி அலுவலகங்கள் இதுதான் அவனோட டார்கெட்.  கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல இவனோட கேங்க்ல வேலை செய்றாங்க..  ஷிப்ட் போட்டு அவங்களை வேலை வாங்கிட்டு இருக்கான்..  விதம் விதமான டிரக்ஸை மிக மிக நேர்த்தியா வித்துட்டு இருக்கான்.. எல்லாமே காஸ்ட்லி. ஆர்டர் பண்ணினா கூரியர்ல அனுப்பிருவாங்களாம்.. நேருக்கு நேர் டீலிங்கே கிடையாது.. எல்லாமே ஆன்லைன் டிரான்சாக்ஷன்தான். ஆர்டர் கொடுத்தா போஸ்ட்ல வந்துரும்.. இந்த கேங் ரொம்ப ஆக்டிவா இருக்கிற காலேஜஸ்ல ஒன்னுதான் நவீன் படிச்ச காலேஜ்.


நவீன் படிச்ச காலேஜிலும் இந்தக் கும்பல் மிகப் பெரிய அளவில் தன்னோட டிரக்ஸை புழக்கத்தில் விட்டிருக்காங்க.. இதை நவீன் தடுக்கப் பார்த்திருக்கார்.. முதல்ல கூப்பிட்டு வார்ன் பண்ணிருக்காங்க போல.. ஆனா நவீன் இந்த கேங்கோட மொத்த டீட்டெய்லையும் கலெக்ட் பண்ணி பெரிய அளவில் இதை இஷ்யூ ஆக்க முடிவு பண்ணிட்டார்னு தெரிஞ்சதும் ஷாக் ஆயிட்டாங்க.. ஏன்னா பல முக்கியப் புள்ளிகள் குறித்த டீட்டெய்ல் அதுல இருக்கும் போல.. அது வெளில வந்தா மொத்த கும்பலும் சிக்கிரும்னு தெரிஞ்சு .. நவீனைத் தூக்கிட்டாங்க"


"ஆனா எங்களுக்குத் தெரிஞ்சு நவீன் யாரோடயும் இதுக்காக சண்டை போட்ட மாதிரி தெரியலையே சார்.. பிறகெப்படி"


"இந்த கும்பல் மோசமானதுன்னு தெரிஞ்சதாலே, தன்னால மத்த யாருக்கும், குறிப்பாக உங்க யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்துக் கூடாதுன்னு உங்க கிட்ட இருந்து இதை மறைச்சிருக்கலாம்.. காரணம், இந்தக் கும்பல் அவ்வளவு மோசமானவங்க.. இந்த இரண்டு பேர் மட்டும் இதுவரைக்கும் 8 கொலை பண்ணிருக்காங்களாம்.. இவங்க இத்தனை நாட்கள் நவீனை உயிரோட விட்டு வச்சதே எங்களுக்கு ஆச்சரியமா இருக்கு.. வழக்கமாக கடத்தி, மிரட்டிப் பார்த்தும் சரியா வராட்டி உடனே போட்டுத் தள்ளிருவாங்களாம்.. ஆனா நவீனை மட்டும் இந்தக் கும்பல் துன்புறுத்தலோட நிறுத்தி வச்சிருக்கு.. பட்.. இன்னும் லேட் ஆயிருந்திருச்சுன்னா அவரோட உயிருக்கும் உத்தரவாதம் சொல்ல முடியாது"


"ஓ.. நவீன் இப்போ எப்படி இருக்கான் சார்"


"He is safe.. கேரளாவுலதான், ஒரு வீட்டுல அடைச்சு வச்சிருக்காங்க.. நல்லா இருக்கார்னுதான் இந்த இரண்டு பேரும் சொல்லிருக்காங்க.. இப்போ அவரை மீட்க எங்க டீம் போயிருக்கு"


"ஓ காட்.. ரொம்ப ஹேப்பியா இருக்கு சார்.. இப்பதான் போன உசுரு வந்த மாதிரி இருக்கு.. சார் எனக்கு டவுட்.. நவீன் போன்ல பேசுனது, வேறு சிலர் அவனோட நம்பரைப் பயன்படுத்திப் பேசுனது..  இதெல்லாம் எப்படி சார்"


"இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஆர்கனைஸ்ட் கிரைம். ரொம்ப நேர்த்தியா  பண்ணிருக்காங்க.. நீங்க நாகர்கோவில் போய் நவீனைத் தேட ஆரம்பிச்சதை இவங்க எதிர்பார்க்கலை.. காரணம், நவீனோட பேமிலி பேக்கிரவுண்ட் அவ்வளவு பெருசா இல்லை.. அப்படிங்கிறதால பெருசா இது வெளியே வராதுன்னுதான் அவங்க நினைச்சிருக்காங்க.. ஆனா நீங்க நாகர்கோவில் கிளம்பிப் போனது, ஒவ்வொருத்தரா விசாரிச்சது, இப்படி அடுத்தடுத்து நீங்க தீவிரம் காட்டியதைப் பார்த்து அவங்க அதிர்ச்சி ஆயிட்டாங்க.. உங்களை டைவர்ட் பண்ணி கேரளாவுக்கு வர வச்சு உங்களை ஒவ்வொருத்தரா போட்டுத் தள்ள அவங்க பிளான் பண்ணிருக்காங்க"


"அய்யோ.. அப்போ நாங்க பார்க்கப் போன நாராயணன் அப்படிங்கிறவர் இறந்தது எப்படி சார்.. அது இயற்கையா இல்லை கொலையா சார்"


"நாராயணன் இயற்கை மரணம்தான்.. அவருக்கு தெரிஞ்ச இடத்துலதான் நவீனை இந்தக் கும்பல் மறைச்சு வச்சிருக்கு.. முதல்ல அதைப் பெருசா எடுத்துக்காத நாராயணன், பிறகு அதோட சீரியஸ்னஸ் தெரிஞ்சு நவீனைக் காப்பாத்த முடிவு பண்ணித்தான் உங்களை அழைச்சிருக்கார்.. ஆனா அதுக்குள்ள அவர் இறந்து போய்ட்டார்.. அத்தோட இல்லாம, உங்களுக்குள் சண்டை மூட்டி உங்களைத் தனித் தனியா பிரிச்சு காலி செய்யும் திட்டத்தையும் இந்த கும்பல் பிளான் பண்ணிருக்கு.. உங்களுக்கெல்லாம் மாறி மாறி வந்த போன் கால்ஸ்தான் அதெல்லாம்.. அந்த பிளாட்ல இப்போ கெளதமி மாட்டிக்கிட்டாங்க.. அவரைக் கூட இந்தக் கும்பல்தான் டைவர்ட் பண்ணி தனியா கிளம்பி வர வச்சிருக்கு.. வெளியே வந்த கெளதமியை ஒரு டெம்போவை வச்சு மேல மோதிருக்காங்க.. நல்ல வேலையா தண்ணியும், சேறும் இருந்த இடத்தில் போய் விழுந்ததால் கெளதமி தப்பிச்சுட்டாங்க.. அந்த டிரைவரை ஏற்கனவே செக்யூர் பண்ணிட்டோம்..  டிரைவர் கிட்ட நடந்த விசாரணையில்தான் இந்தக் கும்பலோட பிளான் தெரிய வந்தது. இந்த இரண்டு பேரும் சிக்கினாங்க"


"சார் முதல்ல நவீனை மீட்டுக் கொண்டு வாங்க சார்.. அதான் முக்கியம்.. இவனுகளை அப்புறமா வச்சு வெளுங்க சார்"


"கூல் ஜார்ஜ்.. நவீன் பாதுகாப்பாதான் இருக்கார்னு கன்பர்ம் பண்ணிட்டோம்.. நவீன் இருக்கிற இடத்தில் உள்ள இந்தக் கும்பலைச் சேர்ந்தவங்களுக்கு இன்னும் இந்த இரண்டு பேரும் சிக்குனது தெரியாது.. நவீன் இருக்கிற இடத்துல வெறும் 3 பேர்தான் இருக்காங்க. நம்ம டீம்ல 15 பேருக்கு மேல இருக்காங்க. ஸோ, பாதுகாப்பா நவீன் மீட்கப்படுவார்"


பேசிக் கொண்டிருந்தபோதே இன்ஸ்பெக்டரின் செல் ஒலித்தது.


"ஹலோ.. பறயூ.. ஆயாள் எங்கன உண்டு..  ஓ.. குட்.. take him to hospital immediately.. ஞான் இப்போள் வரும்"


போனை வைத்தபடி ஜார்ஜைப் பார்த்த இன்ஸ்பெக்டர், "நவீனை மீட்டாச்சு.. நல்லாருக்கார்.. ஆனா உடம்புல காயம் இருக்கு.. ஸோ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறாங்க.. நாம இப்போ அங்க போகலாம் வாங்க"


"ஓ. ஓகே சார்.. "


"ஆமா.. குமார் அப்பிடிங்கிறது யாரு"


"எங்களோட பிரண்ட் சார்.. நாங்கெல்லாம் கிளாஸ்மேட்ஸ்.. அவனும் எங்க கூடத்தான் வந்திருக்கான்.. சேர்ந்துதான் தேடிட்டிருக்கோம்.. என்னாச்சு சார்.. அவனை கேட்கறீங்க"


"அவன்தான் இந்தத் திட்டத்தோட மாஸ்டர் மைன்ட்"


(தொடரும்)

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்