"இல்லடா குமாரு..  எனக்கு அவ மேல ஒரு சின்ன டவுட் வருது.. அவ ஏதோ பண்றாளோ?".. (கெளதமியின் காதல் -18)

Apr 08, 2024,01:20 PM IST

- சுதா. அறிவழகன்


"வண்டியை நிப்பாட்டுங்க"


ஜார்ஜ் போட்ட கூச்சலில் டிரைவரே பயந்து போய் விட்டார். வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினார்.


"எந்தா சாரே.. என்னாச்சு.."


"சேட்டா கொஞ்சம் நின்னுட்டு போலாம். ப்ளீஸ்"


"ஓகே சாரே.. சரி சரி"


வண்டியை விட்டு இறங்கிய ஜார்ஜுக்கு முகமெல்லாம் குப்பென்று வியர்த்தது.. குமாருக்கு ஒன்றும் புரியவில்லை.


"என்ன மச்சான் ஆச்சு.. ஏன் இப்படி வியர்க்குது.. முதல்ல இந்த தண்ணியைக் குடி.. ரிலாக்ஸாகு"


"டேய்.. நம்ம கூடவே ஏதோ ஒரு தப்பு பின் தொடருதுன்னு நினைக்கிறேன்"


"தப்பா.. என்ன அது.. புரியற மாதிரி சொல்லு"


"See, நவீன் குரலில் யாரோ நம்ம கிட்ட பேசறாங்க.. இப்ப பார்வதி மேல தப்புன்னு சொல்லி ஒரு கால் வருது.. எனக்கு சத்தியமா புரியலை.. நம்ம கூடவே ஏதோ ஒரு தப்பு இருக்கு.. பார்வதி ஏதாவது கேம் ஆடறாளா?"




"எனக்கும் அந்த டவுட் இப்ப வருது.. ஆனா பார்வதி நம்ம கூடவேதானே இருக்கா.. அப்புறம் எப்படி அவ கேம் ஆட முடியும்"


"இல்லடா குமாரு..  எனக்கு அவ மேல ஒரு சின்ன டவுட் வருது.. அவ ஏதோ பண்றாளோன்னு டவுட்டா இருக்கு.. இப்ப என்ன பண்றதுன்னு புரியலையே"


"அவ கிட்ட போய் எப்படி கேட்க முடியும்... ஏதாவது லாஜிக் இருந்தாதானேடா போய் பேசவே முடியும்.. அவ நமக்காகத்தானே கூடவே வந்திருக்கா..  கெளதமி கூடவே தான் இருக்கா. அவ எப்படி கேம் ஆட முடியும்.. பட் சந்தேகப்படாம இருக்கவும் முடியலியே"


"வெயிட்.. அவளுக்கு சொந்தக்காரங்க யாரோ இருக்காங்கன்னு சொன்னாள்ள முன்னாடி"


"சொந்தக்காரங்க இல்ல... அவளோட அப்பாவோட பிரண்ட் இருக்கார்னு சொன்னா"


"எஸ்.. அவர் மூலமா ஏதாவது டிராம போட வாய்ப்பிருக்கா.. இல்லை லாஜிக் இடிக்கத்தான் செய்யுது.. பட், நாம எல்லா கோணத்திலும் யோசிச்சாக வேண்டியிருக்கு.. தேவைப்பட்டா நான் உன்னையும் சந்தேகப்படுவேன்.. நீ என்னையும் சந்தேகப்படலாம்.. ஏன்னா நம்ம நிலைமை அப்படி ஆயிருச்சு இப்போ.. "


"டேய் ஏன்டா லூசு மாதிரி பேசறே..நாம எல்லாம் சேர்ந்துதானடா அவனை தேட வந்திருக்கோம்.. நம்ம மேலேயே சந்தேகப்பட்டா எப்படிடா"


"டேய்.. வேற வழியில்லை.. நம்ம கூடவே யாரோ டிராவல் பண்ற மாதிரியே எனக்கு தோணுது.. அது பிரமையா இல்லை.. உண்மையான்னு தெரியலை"


"விட்டா இந்த டிரைவர் மேலேயே சந்தேகப்படுவ போலிருக்கே"


"மச்சான் சீரியஸா பேசிட்டிருக்கேன்.. நம்ம சைடுலதான் ஏதோ தப்பா எனக்கு தோணுது"


"சரி இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லு"


"பார்வதி பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா.. ஐ மீன், ஏதாவது பெர்சனலா?"


"அவளைப் பத்தி எனக்குப் பெருசா தெரியாதே. கெளதமிக்கு நல்ல குளோஸ்.. அந்த அளவுக்குத்தான் தெரியும்.  மத்தபடி தேவையில்லாம யார் கிட்டயும் பேச மாட்டா.. கொஞ்சம் பிடிவாதக்காரி.. அழுத்தக்காரியும் கூட, அத்தனை சீக்கிரமா எதையும் அவ கிட்டயிருந்து வாங்கி விட முடியாது.. இவ்வளவுதான் தெரியும்"


"ம்ம்.. இது பத்தாதே.. அவ நவீன் கிட்ட எப்படிப் பழகுவா.. அது ஏதாவது ஐடியா  இருக்கா.. கெளதமி கூட வரும்போது நவீனை பாத்துட்டேதான் இருப்பா. அதிமாக பேச மாட்டா.. அது எனக்குத் தெரியும்.. பட் அந்தக் கண்ணுலயோ அல்லது பார்வையிலோ எந்த வில்லங்கத்தையும், வித்தியாசத்தையும் நான் பார்த்ததில்லையே"


"என்னால அவளை முழுசா சந்தேகப்பட முடியல மச்சான்"


"எனக்கும்தான்.. பட் டவுட் வருது இப்போ"


"ஓகே.. நாம முதல்ல ஹோட்டலுக்கு போலாம். அங்க போய் அவங்க கிட்ட பேசுவோம்.. இந்த மாதிரி கால் வந்துச்சுன்னே சொல்வோம்.. பார்வதி ரியாக்ஷனை கவனிப்போம்.. என்ன சொல்றா, எப்படி ரியாக்ட் பண்றான்னு பார்ப்போம்.. என்ன சொல்ற.. தேவைப்பட்டா அவளை தனியாக் கூட கூட்டிட்டுப் போய் கேட்டுப் பார்க்கலாம்"


"அதுவும் சரிதான்.. சரி வா கிளம்பலாம்"


மீண்டும் காரில் ஏறிக் கொள்ள கார்.. கார் மீண்டும் சீறிப் பாய ஆரம்பித்ததே.. கூடவே.. மெல்லிதாக மழையும் பின் தொடர ஆரம்பித்தது.


--


ஹோட்டலில் பார்வதிக்கும், கெளதமிக்கும் இருப்பே கொள்ளவில்லை. ஜார்ஜும், குமாரும் போன காரியம் இப்படி சொதப்பியது ஒரு பக்கம் என்றால், மறுபக்கம், ரொம்ப நேரமாக அவர்களிடமிருந்து போனே வரவில்லையே என்ற டென்ஷனும் கூடிக் கொண்டது.


"ஜார்ஜ் அண்ணா ஏன் போனே பண்ணலை பாரு?"


"யாருக்கு தெரியும்.. போனோமோ வந்தோமான்னு இருக்குதுங்களா.. அங்கங்கே வண்டியை நிறுத்தி தம்மடிச்சுட்டு வந்திட்டிருப்பாங்க. அட்லீஸ்ட் அப்டேட்டாச்சும் தரலாம்ல..."


"சரிடி வரட்டும்.. பார்ப்போம்.. பாரு, நவீன் உண்மையிலேயே காணாமல்தான் போயிருப்பானா.. இல்லை வேற ஏதாவது பிரச்சினையா இருக்குமா"


"சத்தியமா தெரியலை எனக்கு.. நாம இங்க வந்ததுக்குப்  பதிலா பேசாம கோயம்பத்தூருக்குப் போயிருக்கலாம்"


"கோயம்பத்தூரா.. அங்க எதுக்கு போகணும்"


"அங்கதானே ரைட்டர் ராஜேஷ்குமார் இருக்கார்.. அவர் கிட்ட போய் கேட்டா.. இப்படியெல்லாம் நடந்திருக்க வாய்ப்பிருக்குன்னு அழகா சொல்லிருப்பார்.. அவர்தான் கிரைம் கதை மன்னனாச்சே.. நாம இவ்வளவு குழம்பிட்டிருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது"


"ஏண்டி நீ வேற.. நானே டென்ஷனா இருக்கேன்"


"கெளதமி.. நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டியே.."


"உன் கிட்ட எப்படி எனக்கு கோபம் வரும்.. பட் கோபம் வராத மாதிரி கேளு"


"வந்தாலும் ஐ டோன்ட் கேர்.. நவீன் வேற யாரையாச்சும் லவ் பண்ணிருக்க வாய்ப்பிருக்கா.. இல்லாட்டி அவனை யாராவது ஒன் சைடா லவ் பண்ணிருப்பாங்களா.. இடையில நீ குறுக்கிட்டதால, கடுப்பாகி அவனைக் கடத்திட்டிருப் போயிருப்பாங்களா.."


"சூப்பர்டி.. நல்லா கதை எழுதறியே.. நீ பேசாம சினிமாவுக்குப் போயிரலாம்.. பெஸ்ட் டைரக்டரா வர வாய்ப்பிருக்கு"


"ஹலோ, நான் சீரியஸாதான் கேட்கறேன்.. அப்படி நடந்திருக்க வாய்ப்பு இருக்கா இல்லையா.. உனக்கு ஏதாவது தோணுதா"


"ஒன் சைட் லவ்,  வேற பொண்ணை லவ் பண்ணியிருக்கலாம்னு சொல்றது.. எல்லாத்திலும் லாஜிக் இருக்கு.. நான் மறுக்க மாட்டேன்.. பட் கடத்தல் வரை போகக் கூடிய அளவுக்கு அவன் கிட்ட எந்த ரகசியத்தையும் நான் அவனோட பழகிய காலத்தில் பார்க்கலை.. ஒரு ஆம்பளை நம்மளை எந்த அளவுக்கு விரும்புறான்றதை அவன் கண்ணை வச்சு கண்டுபிடிக்கலாம் பாரு.. நவீன் கண்ணு நான் கூட இருக்கும்போது என்னைத் தாண்டி வெளியே எங்கேயுமே போகாது. அப்பவும் கூட என்னோட கண்ணை மட்டும் பாத்துதான் பேசுவான்.. என்னோட உடல்ல வேற எங்கேயுமே அவனோட பார்வை மேஞ்சதே இல்லை.. அந்தப் பார்வையில் நான் பார்த்தது காதலும், கண்ணியமும் மட்டும்தான்.. அதையும் தாண்டி ஒரு பாதுகாப்பு.. அதை நான் வேற யாரிடமும் உணர்ந்தது இல்லை..  நீ சொல்ற மாதிரியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை பாரு.. இதெல்லாம் ஜஸ்ட் இமாஜினேஷன்"


"அதெல்லாம் சரி.. ஆனா உனக்கோ, அவனுக்கோ தெரியாம யாராவது அவனை லவ் பண்ணிருக்கலாம்ல.. காரணம், நவீனை பிடிக்காத பெண்ணே இருக்க முடியாது. அவனுக்காக ஏங்கிய பலரை நானே பார்த்திருக்கேன்.. அவன் மேல லவ்வா இருந்த பலரை பார்த்திருக்கேன்.. என்னோட பிரண்ட் ஒருத்தி அப்படி வர்ணிப்பா அவனை.. ஒரு பொண்ணுக்கு பிடிக்கிற அத்தனை விஷயமும் நவீன் கிட்ட இருப்பதாலே அவனை லவ் பண்ணத் துடிச்சவங்க நிறையப் பேர். பட் இடையில நீ குறுக்கே வந்தது யாருக்காவது பிடிக்காமப் போயிருக்கலாம் இல்லையா.. அவங்க ஏதாவது எக்ஸ்ட்ரீம் முடிவுக்குப் போக வாய்ப்பிருக்கு இல்லையா.. நிறைய சினிமாவில் பார்த்திருக்கோமே"


"ஹலோ ஹலோ.. நிறுத்து.. என்னடி திடீர்னு டோன் மாத்தி பேசிட்டிருக்கே.. என்னாச்சு உனக்கு.. என்னோட நவீன் மேல எனக்கு டவுட் இல்லை.. அவன் என்னை மட்டும்தான் காதலிச்சான்.. மே பி, பலர் அவனை விரும்பியிருக்கலாம்.. ஆனால் யார் பக்கமும் அவன் மூச்சுக் காத்து கூட படலைங்கிறது எனக்கு நல்லாவே தெரியும்.. அவ்வளவு ஏன்.. தன்னை யாரெல்லாம் காதலிக்க ஆசைப்பட்டாங்க, காதலைச் சொன்னாங்க, விரும்பினாங்க, என்னெல்லாம் சொன்னாங்கன்னு அவன் என் கிட்ட நிறையவே ஷேர் பண்ணிருக்கான்.."


"ஓ.. "


"ஆமா.. நீ கூட அவனுக்கு லவ் லெட்டர் கொடுத்து.. ரொம்ப உருகி உருகிப் பேசி லவ் பண்ணச் சொல்லி கேட்டதையும் கூட நவீன் என் கிட்ட சொல்லிருக்கான் தெரியுமா?"


(தொடரும்)

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்