"முழுசா சொல்ல முடியாட்டியும்  பரவாயில்லை..  ஏதாவது ஹின்ட்டாவது கொடுக்கலாமே".. (கெளதமியின் காதல் -15)

Mar 19, 2024,05:31 PM IST

- சுதா. அறிவழகன்


கெளதமி சொன்னதைக் கேட்டு ஜெர்க் அடித்துப் போனார்கள் ஜார்ஜும், குமாரும். பார்வதிக்கோ, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பேஸ்த் அடித்தாற் போல இருந்தது அவளது முகம்.


"நிஜமாதான் சொல்றியா கெளதமி"


"ஆமா ஜார்ஜண்ணா.. அவரேதான்.. எனக்கு எப்படிண்ணா அவரோட வாய்ஸ் மறக்கும்.. நிறுத்தி நிதானமா பேசினார்ண்ணா.. ஆனால் அவரோட குரல்ல பழைய தெளிவு தெரியலை.. ஏதோ ஒரு விதமான மன அழுத்தத்தில் இருக்கிறா மாதிரி தோணுச்சு"


"என்னா சொன்னான்.. அதை முதல்ல சொல்லு"


"கெளதமி.. நான் சொல்றதை நிதானமா கேளு.. நீ இங்க இருக்கிறது சரியில்லை.. உனக்கு ஆபத்து இருக்கு.. முதல்ல கிளம்பி ஊருக்குப் போய்ரு.. நான் சீக்கிரமா வருவேன்.. கண்டிப்பா வருவேன்.. இப்போதைக்கு வேறு எதையும் என் கிட்ட கேக்காதே.. என்னால வேற எதையும் சொல்ல முடியாது.. டிலே பண்ணாத.. நீ மட்டும் இல்லை, எல்லோருமே கிளம்பிப் போயிருங்க.. தயவு செய்து நான் சொல்றதை கேளுங்க.. அப்படின்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டார்ண்ணா"


"நீ எதுவும் வேற கேக்கலையா.. பேசலையா"


"நான் பேச முயற்சி பண்ணப்போ அவர் என்னை பேச விடலை.. அவர் மட்டுமே பேசினார். பேசி முடிச்சதும் என்னோட பதிலைக் கூட எதிர்பாராம கட் பண்ணிட்டார்ண்ணா"


"நிஜமாவே அவன்தானாம்மா.. குரல்ல வேற எந்த வித்தியாசமும் தெரியலையா"




"சத்தியமா அவர் வாய்ஸ்தாண்ணா.. நான் கூட முதல்ல யோசிச்சேன்.. ஆனால் அவர் உச்சரிக்கிற விதம், பேசுற விதம் எனக்கு நல்லா தெரியுமே.. அதை வச்சுத்தான் நான் அவர்தான்னு முடிவு பண்ணேன்.. கண்டிப்பா அவர்தாண்ணா.. ஏண்ணா.. இப்படி குழப்பமா இருக்கு இது?.. அவருக்கு என்னதாண்ணா ஆயிருக்கும்.. இப்ப எங்க இருக்கார்ண்ணு கூட தெரியலையே"


"எந்த நம்பர்ல இருந்து வந்துச்சு.. நம்பரைக் காட்டு"


"புது நம்பர்ண்ணா.. இதான் பாருங்க"


வாங்கிப் பார்த்த ஜார்ஜ், நாராயணன் உள்ளிட்ட நம்பர்களுடன் செக் பண்ணிப் பார்த்தான்.. இல்லை.. இதுவரை வந்திராத நம்பர் இது. புது நம்பர்.


"இப்ப என்ன பண்றது பாரு?"


"எனக்கும் புரியலை.. இவ அடிச்சு சொல்றா.. நவீன்தான்னு.. நம்பவும் முடியலை, நம்பாமயும் இருக்க முடியலை..  சரி இப்படி யோசிச்சுப் பார்ப்போம்.. நவீன் குழப்பம் நாகர்கோவில்ல இருந்தே ஆரம்பிக்குது. அங்கிருந்தே நம்மை யாரோ குழப்பிட்டு வர்றாங்க.. எனக்கு அப்படித்தான் தோணுது. முதல்ல ஹாஸ்ப்பிட்டல் நம்பரை அங்க அவரோட ரிலேட்டிவ் தர மறுத்தார்.. அவர் மேல முதல் டவுட் வருது.. அடுத்து நாராயணன்.. பிறகு ஒரு லேடி.. இப்ப நவீனே வந்து பேசியதா இவ சொல்றா.. ஆனால் எனக்கு நவீனோட குரல்ல வேற யாராவது பேசியிருக்கலாமோன்னு தோணுது"


"எனக்கும் அதே டவுட்தான்.. நவீன் ஆபத்துல இருந்தா.. அதை ஏன் அவன் சொல்லிருக்கக் கூடாது.. முழுசா சொல்ல முடியாட்டியும் கூட, ஏதாவது ஹின்ட்டாவது கொடுக்கலாமே.. நாம இங்க வந்திருக்கிறது நவீனுக்கு எப்படி தெரியும்.. அவன் கடத்தப்பட்டிருந்தாலோ அல்லது ஏதாவது நிர்ப்பந்தத்தில் இருந்தாலோ இப்படியா பேசிட்டிருப்பான்.. தன்னைக் காப்பாத்திக்கிற வழி தெரிஞ்சவனாச்சே.. அதை விட முக்கியமா அவனுக்கு நிறைய தற்காப்புக் கலை வேற தெரியும்.. அப்படிப்பட்டவனை இப்படியெல்லாம் ரொம்ப நாளைக்கு அடைச்சு வச்சிருக்க முடியாது.. எல்லாமே இடிக்குது"


"ஜார்ஜ்.. நாம நாராயணனைப் பார்த்தா ஏதாவது தெளிவாகும்னு நினைக்கிறேன்.. ஏன்னா நம்ம கிட்ட பேசிய நபர்களிலேயே நாராயணன் மட்டும்தான் பிசிக்கலா இருக்கிற மாதிரி தெரியுது.. கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிற மாதிரி தெரியுது. ஸோ அந்தாளைப் பார்த்தா தெளிவு கிடைக்கும்.. "


"கரெக்ட் குமார்.. அதான் எனக்கும் தோணுது.. சரி.. இப்போதைக்கு முதல்ல நாராயணனைப் பார்ப்போம்.. பார்த்து பேசினா.. ஏதாவது க்ளூ கிடைக்கலாம்.. அதுவரைக்கும் கெளதமி நீ ரிலாக்ஸ்டா இரு.. அவனுக்கு ஏதோ ஆயிருச்சு.. அது மட்டும்தான் உண்மை.. ஆனால் அவனோட உயிருக்கு ஏதும் நடந்திருக்காதுன்னு நான் உறுதியா நம்பறேன்.. நீயும் நம்பு.. எல்லாருமே நம்புவோம்.. ஒவ்வொரு முடிச்சா விழுந்துட்டே இருக்கு.. நாமளும் ஒவ்வொன்னையும் கிளியர் பண்ணிட்டே முன்னேறுவோம்.. வேற வழியில்லை"


"சரிண்ணா.. அண்ணா நானும் வரட்டா.. எனக்கு இங்க இருப்பு கொள்ளலை"


"நோ.. போற இடமும், ஆளும் எப்படின்னு எங்களுக்கே தெரியலை.. எங்களுக்கே முதல்ல பாதுகாப்பு இருக்கான்னு தெரியலை. நீயும் வந்து ரிஸ்க் ஆயிருச்சுன்னா சிக்கலாய்ரும்.. ஸோ நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க.. நாங்க போய்ட்டு பார்த்துட்டு வர்றோம்"


"ஜார்ஜ்.. எதுக்கும் லோக்கல் போலீஸ் உதவி கேட்கலாமா.. ஒரு சேப்டிக்கு"


"வேண்டாம் பாரு.. போலீஸுக்குப் போய் அது வேற மாதிரியான ரியாக்ஷனைக் காட்டிருச்சுன்னா நவீனுக்கு ரிஸ்க் அதிகமாயிடுமே.. நானும் முதல்ல யோசிச்சேன்.. பட் சரியா வரும்ண்ணு தோணலை.. அதான் சொல்லலை"


"சரி விடுங்க.. முதல்ல நாராயணனைப் போய்ப் பார்த்துட்டு வாங்க.. "


குமார் டாக்சி புக் பண்ண "ஆப்"பை நோண்ட ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் ஒரு டாக்சி கிடைத்து புக் செய்தான். "பண்ணியாச்சுடா.. ரெடி ஆகி வெயிட் பண்ணலாமா"


"அப்படியே கிளம்ப வேண்டியதுதான்.. பக்கம்தானே"


"எஸ்"


"பாரு.. நீங்க சாப்பிட ஏதாவது வேணுமா.. வேற ஏதாவது வாங்கணுமா.. வாங்கிக் கொடுத்துட்டு போறோம்.. அப்படியே ஏதாவது வேணும்னா ரிசப்ஷன்ல சொல்லி வாங்கிக்கோ.. நானும் சொல்லிட்டு போறேன்.. நாங்க அங்க ரீச் ஆயிட்டு.. அந்தாளைப் பார்த்துட்டு கால் பண்றோம்.. அந்த இடத்துக்குப் போனதுல இருந்து வாட்ஸ் ஆப்ல அப்டேட் பண்ணிட்டே இருக்கேன்.. ஸோ உங்களுக்கும் டென்ஷன் இருக்காது"


" அதுவும் சரிதான்.. மெசேஜ் வராட்டி நான் உடனே கால் பண்ணிடுறேன்.. ஸோ, ஏதாவது சிக்கல்னா கூட உடனே தெரிஞ்சிக்கிட்டு ஏதாவது பண்ண வசதியா இருக்கும்"


" எஸ்.. அதேதான்.. ஓகே நாங்க ரூமுக்குப் போயிட்டு ரெடியாகிட்டு வர்றோம்.. இவளை பார்த்துக்கோ"


"ஓகே"


இருவரும் அறையிலிருந்து வெளியேற, பார்வதி ரூம் கதவைப் பூட்டிக் கொண்டாள். 


குமாரும், ஜார்ஜும் ரூமுக்குள் போய் ரெப்ரஷ் ஆகி தயாராகியபோது டாக்சி வந்து விட்டது. டிரைவர் செல்லில் அழைத்தார்.


கதவை பூட்டிக் கொண்டு கெளதமி ரூம் கதவைத் தட்டிய இருவரும், பார்வதி, கெளதமியிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பினர்.


டாக்சி பழைய கார் போல தெரிந்தது.. "என்னடா இது டப்பா வண்டியா இருக்கு.. இதுலயா போய்ட்டு வரப் போறோம்".. குமாரிடம் ஜார்ஜ் புலம்ப, "அதானே.. இப்படில்லாம் கூடவா ஏமாத்துவானுக" என்று டிரைவரிடம் திரும்பி, ஏன் சேட்டா, இவ்வளவு பழைய காரா இருக்கு என்று கேட்டான் குமார்.


"சாரே.. கார் பழசுதான். பட் கண்டிஷன் சூப்பரா இருக்கும்.. தமிழ் பாட்டு கேட்டுட்டே போலாம்.. ஏறுங்க சாரே" என்று கூறி சிரித்தார் டிரைவர்.. நல்ல கலராக, பார்க்க கவர்ச்சிகரமாக மம்முட்டி போல இருந்தார். மீசை மட்டும் கொஞ்சம் அடர்த்தியாக மோகன்லால் மாதிரி இருந்தது.


வேற வழி.. புக்கிங்கை கேன்சல் பண்ணா ஏதாவது சண்டைக்கு வந்தாலும் வருவாங்க.. வந்த இடத்தில் வம்பு எதுக்கு.. கடுப்பை அடக்கிக் கொண்டு இருவரும் காரில் ஏற டாக்சி கிளம்பியது.


"வலியவிள.. அருமையான ஏரியா சாரே.. மிஞ்சிப் போனா அரை மணி நேரம்தான்.. மொத்தம் 3 ரூட்டு உண்டு..  எதுல போகணும் சாரே.."


"சேட்டா.. எங்களுக்கு ஊரு புதுசு.. நீங்களே நல்ல ரூட்டா பார்த்து போங்க.. முக்கியமாக மேடு பள்ளம் இல்லாத ரூட்டா பிடிங்க.. வண்டி குலுங்குனா.. எங்க பாடி தாங்குமான்னு தெரியலை"


வெடிச்சிரிப்பு  சிரித்த டிரைவர், "ஏய்.. அதெல்லாம் கவலை வேண்டாம் சாரே.. ரோடெல்லாம் ஒன்னாங்கிளாஸாயிட்டுண்டு இவிடே..  அது பிரஷ்னம் இல்லா.. வேடிக்கை பார்த்துட்டே போலாம் சாரே" என்று கூறியபடி கியரை மாற்றி வேகம் கூட்டினார்.


"தமிழ்ப் பாட்டு வேணாம்.. ஏதாவது நல்ல பழைய மலையாளப் பாட்டு போடுங்க"


"ஓ மலையாளம் அறியுமோ"


"சேட்டா.. குமாருக்கு தாய்மொழி மலையாளம்தான்.. பட், தமிழ்நாட்டுல பிறந்து வளர்ந்த பேமிலி.. அதனால முழுசா தெரியாது..  ஓரளவு தெரியும்.. பேசுவான்.. படிக்கத் தெரியாது"


"ஓ.. சூப்பர் சாரே" என்று கூறியபடி டிரைவர் குமாரைப் பார்த்து ஸ்பெஷலாக சிரித்தபடி மலையாளப் பாட்டை எடுத்துப் போட்டார். பிரேம்நசீர் படப் பாட்டாம்.. நல்லாத்தான் இருந்தது.




இருவரும் வெளியில் வேகமாக ஓடிய மரங்களையும், இடை இடையே குறுக்கிட்ட கால்வாய்களையும் வேடிக்கை பார்த்தபடி பயணிக்க, காதுகளை ரம்மியமாக வந்து கவ்விக் கொண்டிருந்தது டேப்பிலிருந்து ஒலித்த பாடல்கள். பாதிப் பயணத்தில் அரைத் தூக்கத்துக்கு போய் விட்டனர் இருவரும். அப்படி ஒரு கிளைமேட்.


கிட்டத்தட்ட முக்கால் மணி நேரப் பயணம். வலியவிளை வந்து விட்டது.. "இப்போ எங்கே சாரே போகணும்.. இதுதான் வலியவிளை ஜங்ஷன்"


"இருங்க சேட்டா.. கால் பண்ணி கேட்கிறேன்"


நாராயணன் நம்பரை எடுத்து ஜார்ஜ் அழுத்த.. ரிங் போய்க் கொண்டே இருந்தது. ஃபுல் ரிங் போய் நின்றது. மீண்டும் நம்பரைப் போட்டான் ஜார்ஜ்... நாலஞ்சு ரிங் போன நிலையில் எதிர்முனையில் பெண் குரல்.


"ஹலோ நாராயணன் இருக்காரா"


"ஓ.. ஆயாளு மரிச்சுப் போயி"


"என்னது.." ஜார்ஜ் புரியாமல் குமாரைப் பார்க்க.. குமார் போனை வாங்கினான்.


"ஹலோ நாராயணன் அவிடயுண்டோ"


"யாரானு இது.. ஆயாளு மரிச்சுப் போயின்னு பரஞ்சல்லோ"


"அய்யோ.. எப்போழ்"


மறுமுனையில் அப்பெண் கூறக் கூற குமாரின் முகமே கருத்துப் போனது.


"டேய் குமார்.. என்னாடாச்சு.. "


"நாராயணன் வீட்டுல தூக்கு மாட்டி செத்துட்டானாம்"


(தொடரும்)

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்