- சுதா. அறிவழகன்
"சொல்லி விடு வெள்ளி நிலவே..
சொல்லுகின்ற செய்திகளையே..
உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
கனவுகள் கலைந்ததம்மா..."
"உறவுகள் கசந்ததம்மா.. ம்ம்.. என்னா ஃபீலிங்.. மனோ.. மனோதான்".. எப்.எமில் ஒலித்த பாடலைக் கேட்டு தனக்குள் முனுமுனுத்துக் கொண்டே ஹேன்ட்பேக்கை எடுத்து ஜிப்பைத் திறந்து பர்ஸை எடுத்தாள் கெளதமி. உள்ளிருந்து 500 ரூபாய்த் தாளை எடுத்துக் கொண்டு பர்ஸை உள்ளே திணித்து ஹேன்ட்பேக்கை கீழே வைத்தாள்.
வெளியில் நின்றிருந்த பேப்பர் பையனிடம் பணத்தை நீட்டியவள், "முத்து பலமுறை சொல்லிருக்கேன் உன் கிட்டே.. பேப்பரை வாசலில் தூக்கிப் போடாதேன்னு.. கேட்டுல சொருகிட்டுப் போ, இல்லாட்டி காம்பவுன்ட் வால் மேல வை.. ஏன் தூக்கி விசிறியடிக்கிறே.. 2 நாளைக்கு முன்னாடி தண்ணியில விழுந்து ஊறிப் போச்சு.. பேப்பரை படிக்கத்தானே வாங்கறோம்.. ஜூஸ் போட்டு சாப்பிடவா வாங்கறோம்.. ப்ளீஸ்.. இனிமேல் தூக்கிப் போடாதே"
"ஸாரிக்கா.. இனி, வால் மேலே வச்சுட்டுப் போறேன்".. சங்கடமாக சிரித்தபடி காசை வாங்கிக் கொண்டு கிளம்பினான் முத்து.
கதவை பூட்டி விட்டு உள்ளே திரும்பியவளின் காதில் மீண்டும்.. " சொல்லி விடு வெள்ளி நிலவே"... அடடா இன்னும் இந்தப் பாட்டு முடியலையா.. காலைலேயே சோகமா.. என்று விரக்தியாக சிரித்தபடி அடுத்த வேலைக்குள் மூழ்க ஆரம்பித்தாள்.
என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் ஸ்கெட்ச் போட ஆரம்பித்தவளின் உள்ளத்துக்குள் நினைவுகள் மெல்ல ஊடுறுவி டிஸ்டர்ப் செய்ய ஆரம்பித்தன..
எனக்கும்தான் உறவு ஒரு நாள் கசந்தது.. கசந்த உறவின் நிஜங்கள் மறைந்து விட்டாலும்.. நிழல் போல நினைவுகள் மட்டும் துரத்திக் கொண்டே இருக்கின்றனவே.. மறக்க முடியுமா.. மறக்க முடியாமல் மனம் படும் அவஸ்தைதான் யாருக்காவது தெரியுமா.. கையில் துணிகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தவள் மனசு மெல்ல பின்னோக்கி ஓட ஆரம்பித்தது.
நவீன்.....
எப்போது சந்தித்தோம்..? மறக்க முடியாத சம்பவமாச்சே அது.. !
கல்லூரியில் அப்போது கல்ச்சுரல்ஸ் களை கட்டியிருந்தது. கல்ச்சுரல்ஸ் வந்து விட்டாலே கல்லூரிக்குள் இனம் புரியாத ஒரு பரவசம் வந்து குடி கொண்டு விடும்.. ஒவ்வொருவரும் அத்தனை எக்சைட்டடாக இருப்பார்கள். அதிலும் நவீனை தோளில் தூக்காத குறையாக அவனது நண்பர்கள் ஒவ்வொரு வகுப்பாக வலம் வருவார்கள்..
"மச்சா.. ஏன்டா போட்டிக்கெல்லாம் வர்றீங்க.. நவிதான் இந்த வாட்டியும் சாம்பியன்.. பேசாம எங்க கூட வந்துரலாம்ல.. வெட்டியா டைம் வேஸ்ட் பண்ணிட்டு".. நவீனின் லெப்ட் ஹேன்ட் ஜார்ஜின் எக்காளம் இது.. கேட்க கேட்க கடுப்பாக இருக்கும் மற்றவர்களுக்கு. இத்தனைக்கும் நவீன் அமைதியாதான் இருப்பான்.. அவனிடமிருந்து இதுபோன்ற கிண்டல், நக்கல், நையாண்டியெல்லாம் வராது.. நல்ல பையன்தான்.. ஆனால் கூடவே சுத்தும் வாலுங்கதான்.. ஓவரா சீன் போடுங்க.
"ஹலோ மிஸ்டர் அல்லக்கை.. இதெல்லாம் இனி செல்லாதுபா.. உங்களுக்குப் போட்டி வந்தாச்சு.. இனிமேதான் இருக்கு உங்களோட வீழ்ச்சி".. குரல் வந்த திசை நோக்கி ஜார்ஜ் அன்ட் கோ அதிர்ச்சியுடன் திரும்பியது.. அங்கு நின்றிருந்தது கெளதமியும், அவளது தோழிகளும். எல்லாம் யுஜி பர்ஸ்ட் இயர் கேர்ள்ஸ்.
"என்னம்மா கெளதமி.. "கெள" மாதிரி கம்முன்னு இருப்பேன்னு பார்த்தால்.. சவுண்டெல்லாம் ஜாஸ்தியா வருதே.. சீனியர்ஸ் கிட்ட மோதிப் பார்க்கறீங்களா.. இந்த கல்ச்சுரல்ஸ்ல டைட்டிலை மட்டும் நீ தூக்கிரு.. நாங்க ஒத்துக்கிறோம்.. இல்லாட்டி நாங்க சொல்றதை நீங்க செய்யனும்.. டீலா"
"ஷ்ஷு.. பேச்சைக் குறை மேன்.. ஸ்டேஜ்ல காட்டப் போற வித்தையைப் பார்த்துட்டு பேசு"
கெளதமி சொல்லச் சொல்ல.. அதுவரை ஜார்ஜ் அன் கோவின் நக்கல்களை அமைதியாக சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த நவீன், மெல்ல அவள் பக்கம் திரும்பிப் பார்த்தான். கெளதமியும் எதேச்சையாக நவீனைப் பார்க்க.. நான்கு விழிகளும் மோதிக் கொண்டதில் நாலாபக்கமிருந்தும் பறந்து வந்தன கலவையான உணர்வுகள்.. கெளதமி தனது பார்வையை சட்டென்று விலக்கிக் கொள்ள, நவீன் மட்டும் விழிகளை விலக்காமல் பார்வையை நீடித்தான்.. பட்டென்று அதை உணர்ந்த கெளதமி, தோழிகளுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.
"டேய்.. ஏன்டா வம்பிழுக்கறீங்க.. அவங்க பாட்டுக்குத்தானே இருக்காங்க" என்றபடி நண்பர்களை இழுத்துக் கொண்டு நவீனும் நகர தற்காலிகமாக ஒரு போர் தள்ளிப் போனது.
--
ஜார்ஜிடம் சவால் விட்டு விட்டு வந்து விட்டார்களே தவிர.. சத்தியமாக.. அந்த நிமிடம் வரை கெளதமி மற்றும் தோழிகளிடம் எந்தவிதமான பிளானும் இல்லை.
"ஏன்டி... நீ பாட்டுக்கு வாயை விட்டுட்டு வந்துட்டே.. இப்ப என்ன பண்ணப் போறோம்.. அவனுக சும்மாவே வால் இல்லாத குரங்குப் பயலுக.. நாம ஏதாச்சும் சொதப்புனா அவ்வளவுதான்.. படிச்சு முடிச்சுப் போற வரைக்கும் வச்சு செய்வானுகளே"... பயத்தில் அலறினாள் பார்வதி.
"எனக்கும் உதறலாதான் இருக்கு.. அவன் வாயை அடக்கத்தான் அடிச்சு விட்டேன். பட்.. நிஜமாவே என்னிடமும் பிளான் இல்லடி".. இது உதார் விட்ட கெளதமியின் ஒப்புதல் வாக்குமூலம்.
தோழிகள் 5 பேரும் சற்று அமைதியாக யோசனையில் மூழ்கினார்கள். அந்த அமைதியை கெளதமிதான் உடைத்தாள்.
"ஓகே.. ரிலாக்ஸ்.. இப்ப என்ன.. அவனுகளை நாம ஜெயிக்கணும் அவ்வளவுதானே.. டன்.. கண்டிப்பா ஜெயிக்கிறோம்.. சாம்பியன் டைட்டிலை தூக்கறோம்"
"அதான்டி.. எப்படி"
"அவனுக எதில் எல்லாம் கலந்துக்கறானுக"
"மொத்தம் 15 போட்டி நடக்குது. எல்லாத்திலேயும் இருக்கானுக.. எப்படியும் 10க்கு குறையாம ஜெயிச்சுருவானுக.. "
"ஓ.. ஓகே.. அவனுக க்ரூப்ல யார் ஸ்டிராங்.. ஐ மீன்.. யாரு ரொம்ப திறமையானவன்"
"வேற யாரு.. நவீன்தான்.. அவன்தான் எல்லாத்திலும் ஜெயிப்பான். இதுவரை தோத்ததே கிடையாது. எமகாதகன்.. பட் நைஸ் ஃபெல்லோடி"
" ரொம்ப முக்கியம் இப்போ இந்த "நைஸ்".. ஜொள்ளு விடாதீங்கடி மொதல்ல.. ஓகே. நாமளும் எல்லாப் போட்டியிலும் இறங்குவோம். முடிஞ்சவரைக்கும் டஃப் கொடுப்போம்.. போட்டி கடுமையானாலே அவனுகளுக்குள்ள ஒரு பீதி வந்துரும்.. எதாச்சும் சொதப்புவானுக.. அத வச்சே அவனுகளை சரிச்சுடலாம்.. என்னங்கறீங்க"
"ஐடியா நல்லாதான் இருக்கு.. ஆனால நாம ஜெயிப்போமா"
"வாயக் கழுவுடி முதல்ல.. நம்பிக்கையோட இறங்குவோம்.. நச்சுன்னு திறமைகளை இறக்குவோம்.. ஜெயிக்கிறோம்.. கப்பைத் தூக்கறோம்.. ஓகேவா"
"நீ சொல்றே.. ரைட்டு விடு.. எல்லாத்திலும் அவனை ஜெயிக்க முடிஞ்சாலும் கூட பாட்டுப் போட்டில மட்டும் அவனை அடிச்சுக்க ஆளே கிடையாது.. அதுதான் சிக்கலே.. "
"விடு விடு பார்த்துக்கலாம்.. முடியாததுனு எதுவுமே இல்லடி.. என்கிட்ட ஒரு டிரம்ப் கார்டு கையில் இருக்கு.. தைரியமா இறங்கி அடிக்கலாம்.. இப்ப வாங்க சூடா ஒரு காபி குடிக்கலாம்"
கலகலத்தபடி கேன்டீனை நோக்கிப் பறந்தன அந்த சிட்டுக் குருவிகள்.
(தொடரும்)
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}