"கெளதமி நல்லவர்.. ஆனால் உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார்.. சரியல்ல".. நாராயணன் திருப்பதி

Oct 23, 2023,02:48 PM IST

சென்னை: நடிகை கெளதமி நல்ல கலைஞர், அமைதியானவர், பண்பானவர், நல்லவர். ஆனால் தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக பாஜகவை தொடர்புப்படுத்துவது சரியல்ல என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.


நடிகை கெளதமி விவகாரம் சூடு பிடித்துள்ளது. அவருக்கு ஆதரவாக பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன், வானதி சீனிவாசன் போன்றோர் கெளதமியின் பிரச்சினை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 


அந்த வகையில் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




கௌதமி ஒரு சிறந்த திரைப்பட கலைஞர். அமைதியானவர். பண்பானவர். நல்லவர். தன்னை அழகப்பன் என்ற ஒருவர் மோசடி செய்து விட்டதாகவும், அதனால் மனம் உடைந்து போய் வேதனையுடன் பாஜக விலிருந்து ராஜினாமா செய்வதாக  குறிப்பிட்டிருக்கிறார்.  20 வருடங்களாக அழகப்பனை தனக்கு தெரியும் என்றும், தானாகவே அவரிடம் சொத்துக்கள் குறித்த ஆவணங்களை அளித்ததாக கூறி விட்டு, இந்த விவகாரத்தில் பாஜக தனக்கு உதவவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது முரண். 


அந்த நபர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில், அவருடைய தனிப்பட்ட விவகாரத்தில் எப்படி கட்சி தலையிட முடியும்? மேலும் சில மூத்த தலைவர்கள் அழகப்பனுக்கு உதவி புரிவதாக சொல்வதும் முறையல்ல என எண்ணுகிறேன். அப்படி யாராவது உண்மைக்கு எதிராக துணை நிற்பதாக கௌதமி அவர்கள் நிரூபித்தால், நான் அவருக்கு பக்கபலமாக இருந்து குரல் கொடுக்க தயார்.


கௌதமி நீண்ட நாட்களாக கட்சியில் உள்ளார், அவர் மூலம் தான் அழகப்பனுக்கு பாஜகவில் உள்ள சிலருக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படியானால், அவர் எப்படி மற்றவர்களை குற்றம் சொல்ல முடியும் என்று புரியவில்லை. ஒரு வேளை, யாரேனும் கெளதமி ஏமாற்றப்பட்டது தெரிந்து அவருக்கு எதிராக செயல்பட்டதாக ஆதாரம் இருந்தால், வெளிப்படையாக கட்சியின் தலைவர்களிடம் கூறியிருக்கலாம். 


ராஜபாளையம் தொகுதியில் கடைசி நிமிடத்தில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறியிருப்பது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகின்றது. கடைசி நிமிடத்தில் என்று அவர் கூறியிருப்பதிலிருந்தே, அவருக்கு வாய்ப்பு கொடுக்க கட்சி தலைமை முடிவு செய்திருந்தது என்பதையும், கூட்டணி காரணமாக அந்த தொகுதியில் போட்டியிட முடியாததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் தெரிகிறது. 


ஆகவே, அவருடைய பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதோடு, அவரே அவரின் பிரச்சினைகளை வரவழைத்து கொண்டிருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. அவர் தன்னை மோசடி செய்தவர் மீது புகார் கொடுத்திருக்கிறார். காவல் துறை விரைவாக குற்றச்சாட்டுக்கு ஆளான அழகப்பனை கைது செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கௌதமிக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய நாம் தயாராய் உள்ளோம். 


உணர்ச்சி வசப்பட்டு கௌதமி கட்சியிலிருந்து விலகுவதாக எடுத்துள்ள முடிவிலிருந்து பின் வாங்கினால் மகிழ்ச்சி. இல்லையேல் அது அவரின் தனிப்பட்ட தவறான முடிவு. கெளதமி,  நல்லவர். ஆனால், அவர் ஏமாற்றப்பட்டது  கட்சியினாலோ, கட்சியினராலோ அல்ல. அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும். அவரின் பிரச்சினைகள் விரைவில் தீரட்டும் என்று அவர் கூறியுள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்