ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும்..  வெள்ள நிவாரணத் தொகைக்கு.. விண்ணப்பிக்கலாம்.. எப்படி?

Dec 16, 2023,05:06 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரணத் தொகை நேரடியாக வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு வங்கிகள் மூலம் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


மிச்சாங் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையை போக்க தமிழக அரசு ரூபாய் 6 ஆயிரம்  நிவாரணத் தொகை அளிக்க உத்தரவிட்டது. இதில் யார் 6000 நிவாரணத் தொகை பெற தகுதி உடையவர்கள் என்பதை அறிவித்திருந்தனர்.


இந்நிலையில் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், ஆகியோருக்கு நேரடியாக ரொக்கப் பணம் வழங்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக இவர்களுக்கு ஒரு விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் தனித்தனியாக விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரங்கள் தெரிவித்து வங்கியின் மூலமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதில்  11 கேள்விகள் கொண்ட விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.




ஆதார் எண்

வீட்டு முகவரி

குடும்பத் தலைவியின் அல்லது தலைவர் பெயர்

வங்கிக் கணக்கு விவரம் (வங்கி பெயர், கிளை, கணக்கு எண்)

பாதிக்கப்பட்ட வீட்டின் வகை (குடிசை வீடு, அடுக்குமாடி குடியிருப்பு)

பாதிப்பின் விபரம் (பகுதியாக பாதிக்கப்பட்டதா, முழுவதுமாக பாதிக்கப்பட்டதா)

வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து துணிகள் மற்றும் பாத்திரங்கள் பாதிக்கப்பட்டதா

வீட்டில் உள்ளே தண்ணீர் சென்று வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதா.. போன்ற விவரங்கள் அதில் கேட்கப்பட்டுள்ளன.


உறுதிமொழியாக மிச்சாங் புயலால் எனது வீட்டில் வெள்ளம் புகுந்து துணிமணிகள் மற்றும் உடைமைகள் சேதம் அடைந்து  எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என விண்ணப்பத்தை பூர்த்தி செய்பவர்கள் கையெழுத்திட வேண்டும். 


அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் நபர் வருமான வரி கட்டுபவர்கள், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டை இல்லாதவர்கள், ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள நியாயவலைக்கடையில் சென்று விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் பின்னர் பாதிப்பின் தீவிரத்தை அறிந்து  அரசு நிவாரணத் தொகை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கன் நேற்று முதல் வீடு தேடி சென்று கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 17 அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

அதிகம் பார்க்கும் செய்திகள்