தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

Sep 18, 2024,01:42 PM IST

சென்னை:   தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், அந்த சமயத்தில், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.


நாட்டில் பண்டிகை காலங்கள் என்றாலே படு குஷி தான். அதிலும் தீபாவளி பொங்கல் பண்டிகை என்றால் சொல்லவே வேணாம். தொடர் விடுமுறை காரணமாகவும் மக்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும்  இந்த பண்டிகை காலங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ரயில் பேருந்துகளை மக்கள் நாடிக்குச் செல்கின்றனர். அப்போது அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த சமயத்தில் மக்கள் பாதுகாப்பு இன்றியும் தவித்து வருகின்றனர். 




இது தான் சமயம் என்று தனியார் வாகனங்களும் கூடுதல் கட்டணத்தை வசூலித்து விடுகின்றனர். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஏனெனில் இந்த நாட்களில் ஊரகப் பகுதிகளில் உள்ள பேருந்துகளை நகரங்களில் இயக்குவதால் அங்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதனை தடுக்க ஏற்கனவே தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் தொடர்பு விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து செல்வதற்கும் வருவதற்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. 


அதேபோல் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது. இது மக்களிடையே பெருமளவில் வரவேற்கப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும் மக்கள் தங்கள் பொழுதுபோக்குகளை கழிக்க வெளியே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், சொந்த ஊர்களுக்கு பயணிப்பதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர். இதனால் பண்டிகை நாட்களில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. 


இதனை சமாளிக்க தமிழக அரசு ஒரு சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் வார இறுதி நாட்கள் மட்டும் பண்டிகை காலங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை சமாளிக்கவும், அப்போது ஏற்படும் கூட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையிலும் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு சார்பில் ஓட்டுநர் நடத்துபவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்