"முதல்வருடன் சுமூகமான சந்திப்பு".. தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே இயல்பு நிலை திரும்புகிறதா?

Dec 30, 2023,09:47 PM IST

சென்னை: அரசியலமைப்பு சாசனத்திற்கு உட்பட்டு மாநில அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலிடனுடன் சுமூக சந்திப்பு நடந்ததாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, இரு தரப்புக்கும் இடையிலான இறுக்க நிலை குறைவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து முட்டல் மோதல் இருந்து வருகிறது. இரு தரப்பும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மாறி மாறி குட்டிக் கொள்வது தொடர் கதையாகியுள்ளது.


இந்த விவகாரம் சமீபத்தில் உச்சநீதிமன்றம் வரை போய் விட்டது. ஆளுநர் சட்ட மசோதாக்களுக்கு அனுமதி தருவதில் தாமதம் செய்வதாக கூறி தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகள், அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது. அதில் ஒன்று "முதல்வரும், ஆளுநரும் ஏன் பேசக் கூடாது.. பேசித் தீர்வு காண முயலக் கூடாது"" என்பதாகும்.


ஆளுநருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல் இது. இந்த அறிவுறுத்தலின்படி முதல்வர் ஸ்டாலினை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆளுநர் ரவி அழைக்கவே, முதல்வரும் இன்று மாலை ஆளுநர் மாளிகை சென்றார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோரும், உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.




கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் பேசப்பட்டது என்ன என்பது குறித்து சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் விளக்கினார். அதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையும் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. வழக்கமாக சுருக்கமான அறிக்கையாக இல்லாமல் சற்று நீண்டதாக இந்த அறிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது.


அதில், 


ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மாநில அரசு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கும் சந்திப்புக்கு அழைத்திருந்தார். அதன்படி, முதலமைச்சர், ஆளுநரை ஆளுநர் மாளிகை, சென்னையில் இன்று (30.12.2023) மாலை 5.30 மணியளவில் சந்தித்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் மாநில தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் ஆகியோரும் வந்திருந்தனர். 


இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது. தமிழ்நாடு ஆளுநரும், முதலமைச்சரும் பரஸ்பரம் மரியாதையை பரிமாறிக் கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஆளுநர், தமிழ்நாட்டு மக்களின் நலனில் தாம் முழு ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.


ஆளுநர் ஆர். என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?


ஆளுநர், மாநிலத்தின் மிகப்பெரிய நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் அவ்வப்போது சந்திப்புகள் நடைபெற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


சுமூகமான சந்திப்பு என்று அரசுத் தரப்பிலும் கூறப்பட்டிருந்தது. அதேபோல ஆளுநரும் கூறியுள்ளார். ஆக, இந்த சந்திப்பு இரு தரப்புக்கும் இடையே நிலவி வந்த பிணக்கு மற்றும் இறுக்கமான சூழ்நிலைய தளர்த்த உதவும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.  இந்த நிலை தொடர்ந்து மோதல் போக்குகளும் முடிவுக்கு வந்தால் மாநில நலனுக்கு அது பெரும் பயனைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்