தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!

Apr 24, 2025,01:44 PM IST

சென்னை:  யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதும், வெல்வதும் எளிதல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.


ஐஏஎஸ்., ஐபிஎஸ்., மற்றும் மத்திய அரசு பணிகளுக்கான குரூப் - ஏ மற்றும் பி பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல் கட்ட தேர்வு நடைபெற்றது. இதில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 599 தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.அவர்களில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 213 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 14,627 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு ஜனவரி 7 முதல் ஏப்ரல் 17 வரையில் நேர்முகத் தேர்வுகள்  நடத்தப்பட்டன. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி முடிவு நேற்று வெளியாகின.




இந்தத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகமான தேர்ச்சியாகும். இந்தாண்டு நடந்த தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில், தர்மபுரியை சேர்ந்த சிவசந்திரன் தேசிய அளவில் 23வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்து உள்ளனர். 


இந்நிலையில் , யுபிஎஸ்சி 2024 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தேர்வுக்கு தயாராவதும், வெல்வதும் எளிதல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டே இருங்கள். பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்

news

திருமண நாளான இன்று மனைவிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த.. எஸ்.ஏ சந்திரசேகர்..!

news

ஒரு நிஜம் .. ஒரு கற்பனை..!! (சிறுகதை)

news

பிரியா விடை பெற்ற.. தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்..!

news

கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

news

காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!

news

தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!

news

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!

news

தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்த வேண்டும்: சீமான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்