சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் சம்பவம், அப்போது நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது எதிர்க்கட்சிகள் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக முழக்கமிட்டு போர்க்கொடி ஏந்தினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் மு க ஸ்டாலின் தாக்கல் செய்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.
பெண்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என பல்வேறு முக்கிய அம்சங்கள் புதிய சட்டத் திருத்தத்தில் இடம் பெற்றிருந்தன.
இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்த பிறகு இது சட்டமாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
76 ல் ஷாவால்தான் திராவிட மாடல் ஆட்சி கலைக்கப்பட்டது: டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்!
Out of control இல்லை.. Out of cantact.. முதல்வர் பேச்சுக்கு அண்ணாமலை அதிரடி பதில்!
உ.பிக்கு என்னாச்சு?.. ஒரே எஸ்கேப்பா இருக்கே.. மகளின் மாமனாருடன் தலைமறைவான பெண்!
சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!
{{comments.comment}}