சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டி தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது . மேலும் ஜூன் 15ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு நடத்தும் குரூப்-1, குரூப் 2, குரூப் 4, போன்ற போட்டி தேர்வுகள் மூலம் அரசுப் பணியிடங்களில் அமர வேண்டும் என்பது இன்றைய தலைமுறையினரின் கனவாக உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இளைஞர்களும் பெண்களும் மும்மரமாக தயாராகி வருகின்றனர். அதே சமயத்தில் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஆணை எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்ப்புடனும் காத்து வந்தனர்.
இந்த நிலையில் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று குரூப்-1,போட்டி தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் ஒன் தேர்வு மூலம் மொத்தம் காலியாக உள்ள 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 28 துணை ஆட்சியர் பணிகள், 7 துணை காவல் கண்காணிப்பாளர் பணிகள், 19 வணிக வரி உதவி ஆணையாளர் பணியிடங்கள், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடங்கள், 6 உதவி ஆணையர் பணிகள் என மொத்தம் 70 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1.7.2025 அன்று தேர்வாளர்களுக்கு 21வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக வயது வரம்பு 34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையவர்கள் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குரூப் 1 முதல்நிலை தேர்வு தேர்வு வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறும். முதன்மை தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}