அரசு கல்லூரிகளில்.. 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்.. தேர்வு தேதி அறிவிச்சாச்சு.. சூப்பர் நியூஸ்!

Mar 14, 2024,06:09 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


இந்தத் தேர்வில் கலந்து கொள்வதற்கு, மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.




கடந்த 2012 ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. அப்போதிலிருந்து அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகளில் பேராசிரியருக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அரசு கல்லூரிகளில் பணியமர்த்தபடுவார்கள். இதுவரை அரசு சார்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றில் உதவி பேராசிரியருக்கான பணியிடங்கள் 4000 வரை நிரப்பப்படாமல் உள்ளன.


இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில்  569 உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உட்பட 4000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த 4000 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முதுகலை பட்டத்தில் குறைந்தது 55 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். செட் அல்லது நெட் தேர்வில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்