விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் வழி தெரியாமல் இருக்கக் கூடாது என்பதற்காக கூகுள் மேப்பில் மாநாடு நடைபெறும் இடம் குறிப்பிடப்பட்டு உள்ளதாம்.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியின் முதல் கொள்கை மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே விசாலை கிராமத்தில் நாளை மாலை 4 மணிக்கு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 50000 பேர் அமரும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை தலைமை ஏற்கும் தவெக தலைவர் விஜய் கட்சி கொள்கை மற்றும் கட்சிக்கொடி குறித்து பேச இருக்கிறார். இதனைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் தமிழகமே எதிர்பார்த்து காத்து வருகிறது.
இந்த மாநாட்டில் திரளான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள், என பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு பிஸ்கட் பாக்கெட், ஒரு மிக்சர் பாக்கெட், ஒரு வாட்டர் பாட்டில் கொண்ட ஒரு செட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அலைகடலென தொண்டர்கள் வருகை தர இருப்பதால் எவ்வித அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பத்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர தமிழ்நாட்டில் இருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் தொண்டர்கள் வர இருப்பதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தவெகவின் மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளியூர் வெளிநாடுகளில் இருந்தும் தொண்டர்கள் வர இருப்பதால் அவர்களுக்கு வழி தெரியாமல் சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே google மேப்பில் மாநாடு எங்கு நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி தொண்டர்கள் தங்கள் இருக்கும் இடத்திலிருந்து google மேப்பில் தமிழக வெற்றிக் கழகம் என்று தேடினால் மாநாடு நடைபெறும் இடத்திற்கு எவ்வாறு செல்வது.. அதற்கு எவ்வளவு தூரம் உள்ளது.. என்ற விவரம் இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
இதெல்லாம் செய்யக்கூடாது
தவெக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் செல்பி ஸ்டிக், கேமரா, பைக், ட்ரோன் கேமரா, கூர்மையான ஆயுதங்கள், சிகரெட், உள்ளிட்ட பல பொருள்கள் வளாகத்திற்குள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}