2வது ஆண்டைத் தொட்டது.. நடிகர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ்.. புது ஸ்டுடியோ திறப்பு!

Apr 08, 2024,11:57 AM IST

சென்னை: இயக்குநர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது


முன்னணி நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியு திரையரங்கம் கடந்த 40 வருடமாக இயங்கி வந்தது. இது கடந்த ஆண்டு முதல் குட்லக் ஸ்டூடியோஸ் எனும் பெயரில் இயங்கி வருகிறது. குட்லக் ஸ்டூடியோவை கடந்த வருடம் நடிகர் சூர்யா மற்றும் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு ஆகியோர்  தொடங்கி வைத்தனர். 




கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரியும் அவரது மனைவி ப்ரீதா ஹரியும் இணைந்து இதை நடத்தி வருகின்றனர். டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்டதாக குட்லக் ஸ்டுடியோ மாற்றப்பட்டுள்ளது.


கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, 5.1 மிக்ஸிங் மற்றும் டப்பிங் வசதி கொண்ட புதிய ஸ்டுடியோவை இயக்குநர் ஹரி தொடங்கினார்.அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் திரையுலகத்திற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்று கூறிய இயக்குநர் ஹரி, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார். 




இதற்கிடையே, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள 'ரத்னம்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் 'ரத்னம்' திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர். 




பிரியா பவானிஷங்கர் இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 26 அன்று 'ரத்னம்' திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் திரைப்படம் உருவாகியுள்ளதாக ஹரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்