எப்போதும் நீதான் "எங்கள் ஆசான்".. நீ ஆண்டது "விருதகிரி"..  என்றென்றும் தொடரும் உன்.. "சகாப்தம்"!

Dec 29, 2023,07:40 PM IST
சென்னை: கேப்டன் விஜயகாந்த் விடை பெற்று விட்டார்.. மறக்க முடியாத நினைவுகளை மட்டும் நமக்குத் தந்து விட்டு அவரது உருவம் கிளம்பி விட்டது.. தமிழ்நாட்டின் சரித்திரத்தின் பசுமையான பக்கங்களில் விஜயகாந்ததுக்கு மிகப் பெரிய இடம் உண்டு.

மக்களால் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாத மாபெரும் தலைவனான விஜயகாந்த்துக்கு ஒரு நினைவாஞ்சலி.. அவர் நடித்த படங்களின் பெயரால்!

போய் வாருங்கள் கேப்டன்.. வாய்ப்பிருந்தால் மீண்டும் இங்கேயே பிறந்து வாருங்கள்!



"அகல் விளக்கு" ஏற்றி வைத்து 
திரை வானில் கருப்பு மின்னலாய் நுழைந்தாய்
"இனிக்கும் இளமை" மூலமாக
திரையுலகில் தொடங்கியது உன்னுடைய "நீரோட்டம்"
"சாமந்திப்பூ" போல உதித்த உன் வரவு
எங்களுக்கு ஒரு "தூரத்து இடி முழக்கம்"
"சட்டம் ஒரு இருட்டறை" என்று கூறி முழங்கிய
நீ 
ஒரு "சிவப்பு மல்லி"
உன் "நெஞ்சில்  துணிவிருந்தால்"
எங்கள் "சாதிக்கொரு நீதி" கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது
"நீதி பிழைத்தது"
உன் கருமை நிறம் கண்டு
திரும்பிப் பார்க்காத ஒவ்வொருவரையும்
திரும்ப வைத்தது
"உன் பார்வையின் மறுபக்கம்"
உன் சிவந்த கண்கள் கண்டு
"பட்டணத்து ராஜாக்கள்" பதறி ஓடினார்கள்..
பார்த்து வியந்தார்கள்
உருவம் கண்டு எள்ளாமை வேண்டும்
அதற்கு நீயே "சாட்சி"
வீராவேசமாக வந்த "மதுரை சூரன்" நீ
நீ தொட்டதெல்லாம் "வெற்றி"
உன் உருவில் நாங்கள் கண்டதெல்லாம் "வேங்கையின் மைந்தன்"
அன்றே சொன்னாய்.. "நாளை உனது நாள்" என்று
உன் படங்கள் பல கண்டது "நூறாவது நாள்"
தமிழ்நாடே உன் "குடும்பம்"
அத்தனை பேரும் உனக்கு தம்பி தங்கை .. "மாமன் மச்சான்"
உன் வரவுக்காக அன்று "வைதேகி காத்திருந்தாள்"
உன் படங்கள் வந்த ஒவ்வொரு நாளும் நாங்கள் போட்டோம் "சபாஷ்"
உன் "அலையோசை" ஓய்வதில்லை.. 
ஓயாமல் தொடரும் அந்த குரலோசையில் 
நாங்கள் கண்டோம் ஏராளமான "சந்தோச கனவுகள்"
திரையுலகில் உன் வரவு ஒரு "புதுயுகம்"
என்றென்றும் மறக்க முடியாத "புதிய சகாப்தம்" நீ!



நீ எழுதியதெல்லாம் "புதிய தீர்ப்பு"
உன் குரலில் தெரிந்ததெல்லாம் "எங்கள் குரல்"
அநீதிகளை நோக்கி வார்த்தை தீ மூட்டி நீ எரிந்தாய் "ஈட்டி"
நீ போதித்ததெல்லாம் ஒன்றேதான்.. "ஏமாற்றாதே ஏமாறாதே"
வாரி வழங்கிய அன்பால்
எல்லோரையும் கட்டிப் போட்ட நீ 
வம்பு செய்வோருக்கு தந்தாய் தக்க "தண்டனை"
நீ சொல்வாய் "நானே ராஜா நானே மந்திரி"
அதில் ஒரு தவறும் இல்லை
காரணம் "எனக்கு நானே நீதிபதி" என்று சொன்னவனும் நீ!
எங்களுக்கெல்லாம் நீ "ஒரு இனிய உதயம்"
உன்னைப் பார்த்து
ஒரு காலத்தில் இகழந்தார்கள் "கரிமேடு கரிவாயன்" என்று சொல்லி
ஆனால் உலகம் ஒரு நாள் உணர்ந்தது
உன்னை "நம்பினார் கெடுவதில்லை" என்று!
நீதான் எங்களுக்கெல்லாம் "தர்ம தேவதை"
உன்னைத் தப்புத் தப்பாக எண்ணி
பலரும் போட்டனர் "மனக்கணக்கு"
ஆனாலும் அவர்களையும் அணைக்கத் தவறியதில்லை உன் "தழுவாத கைகள்"

நீ "சொல்வதெல்லாம் உண்மை"
உன் "நினைவே ஒரு சங்கீதம்"
உன்னை நினைக்கும்போது நெஞ்சுக்குள் "பூ மழை பொழியுது"
ஒவ்வொருவருக்குள்ளும் நீ ஊன்றிய விதை "உழைத்து வாழ வேண்டும்"
எங்களின் "காலையும் நீயே மாலையும் நீயே"
உன்னை நினைக்காத பொழுதில்லையே!
அண்ணன்களுக்கெல்லாம் நீ "தம்பி தங்கக் கம்பி"
நம்பிய அத்தனை பேருக்கும் "நல்லவன்"
எத்தனையோ பேருக்கு நீ "பூந்தோட்ட காவல்காரன்"
"மக்கள் ஆணையிட்டால்" உன் "தர்மம் வெல்லும்"
என்றென்றும் எங்களின் "பொன்மன செல்வன்" நீ
என்றென்றும் எங்கள் மனக் கண்ணை விட்டு அகலாது உன் "ராஜநடை"



உன்னைப் புரியாதவர்களுக்கு நீ "சத்ரியன்"
புரிந்தவர்களுக்கு நீ ஒரு "சந்தனக் காற்று"
என்றென்றும் எங்களின் "கேப்டன் பிரபாகரன்"
உன்  "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்"
வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த "காவியத் தலைவன்"
நீ ஒரு நீதி தவறாத "சின்ன கவுண்டர்"
பேச்சிலும் மூச்சிலும் தெறித்து நிற்கும் உன் "தாய்மொழி" மீதான பாசம்
கோடானு கோடி தொழிலாளர்களின் மனம் கவர்ந்த "எங்க முதலாளி"
என்றென்றும் உனக்குப் பிடித்தது "ஏழை ஜாதி"

கோபம் வந்தால் நீ ஒரு "கோயில் காளை"
பாசத்தில் நீ ஒரு "சக்கரைத் தேவன்"
நீதிக்கும் நேர்மைக்கும் மட்டுமே வணங்கும் "ஆனஸ்ட் ராஜ்"
எங்களை விட்டு மறைந்து விட்ட "கருப்பு நிலா"
இது "காந்தி பிறந்த மண்"
எங்களுடனேயே சுற்றிக் கொண்டிருக்கும் உன் "தர்மச்சக்கரம்"
மீண்டும் பிறந்து வா "பெரியண்ணா"
உனக்காகவே காத்திருக்கும் எங்கள் மனதில் "சிம்மாசனம்"
கோபத்திற்கு "வல்லரசு".. வாஞ்சைக்கு "வாஞ்சிநாதன்".. ஆவேசத்திற்கு "நரசிம்மா".. அன்புக்கு "தவசி"
கானல் நீராகிப் போய் விட்டதே உன் "ராஜ்ஜியம்"



எங்கு போய் விட்டாய் எங்கள் "ரமணா"
உரசிப் பார்க்கத் தேவையில்லாத எங்கள் "சொக்கத்தங்கம்"
மனங்களில் வாழும் "தென்னவன்".. !
நீயே என்றென்றும் எங்கள் மன்னவன்
உன்  "நிறைஞ்ச மனசு" யாருக்கு வரும்
உன் வசம் சிக்காமல் போய் விட்டதே இந்த "பேரரசு"
மக்கள் பார்க்கத் தவறியது உன் "அரசாங்கம்"
மலை போல் நிமிர்ந்து நிற்கிறது உன் மீதான "மரியாதை"
எப்போதும் நீதான் "எங்கள் ஆசான்"
நீ ஆண்டது "விருதகிரி" மட்டுமே
ஆனாலும்
என்றென்றும் தொடரும் உன்.. "சகாப்தம்"!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்