சென்னை: தங்கம் விலை புதிய உச்சத்தை நோக்கி தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.58,720க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,340க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.112க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று தங்கம் விலை சவரன் ரூ.59,000த்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி சொல்வது வாடிக்கையாளர்களிடையே கலக்கத்ததை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயர்விற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றம், வல்லரசு நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் உலக நாடுகளின் நாணயக் கொள்கைகள், ஐரோப்பிய மத்திய வங்கி அறிவித்த வட்டி குறைப்பு உள்ளிட்ட காரணங்களினால் தான் தங்கம் விலை தற்போது தாறுமாறாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படியே போன நகை வாங்குவதை பற்றி யோசிக்கவே முடியாது போல. நகை விலை தான் ஏறுதுனு வெள்ளி விலையை பார்த்தால் அதுவும் குண்டக்க மண்டக்க ஏறுது... என்று நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தற்போது அதிகளவில் புலம்ப ஆரம்பித்து விட்டனர். அது மட்டும் இன்றி ஐப்பசியில் திருமணம் வைத்திருப்பவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.7,340க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.8,007க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,720 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.73,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,34,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,007 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,056 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.80,070 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,00,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,022க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,345க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,012க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து அக்டோபர் 17ம் தேதி வரை வெள்ளி விலை பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்தது. அதன்பின்னர் அக்டோபர் 18ம் தேதியில் இருந்து தொடர்ந்து உயரத்தொடங்கியது வெள்ளி விலை. அதுவும் வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.112 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 896 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,120 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,200 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,12,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}