சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.58,280க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,285க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் இன்று திடீர் சரிந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றம், வல்லரசு நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் உலக நாடுகளின் நாணயக் கொள்கைகள், ஐரோப்பிய மத்திய வங்கி அறிவித்த வட்டி குறைப்பு உள்ளிட்ட காரணங்களினால் தான் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வந்தது.
இதனால், இனி வரும் காலங்களில் நகை விலை குறைய வாய்ப்பில்லை என்று நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மக்கள் புலம்பி வந்த நிலையில், இன்று நகை விலை திடீர் என குறைந்து இருப்பது வாடிக்கையாளர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தினாலும், ஒரு பக்கம் மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. அதுவும், அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், நகை விலை குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.7,285க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,947க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,280 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,850 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,28,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,947 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,576 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.79,470 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,94,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,962க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,952க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து அக்டோபர் 17ம் தேதி வரை வெள்ளி விலை பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்தது. அதன்பின்னர் அக்டோபர் 18ம் தேதியில் இருந்து தொடர்ந்து உயரத்தொடங்கியது வெள்ளி விலை.இந்த நிலையில் இன்று குறைந்துள்ளது வெள்ளி விலை.
1 கிராம் வெள்ளி விலை ரூ.110 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 880 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,100 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,000 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,10,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!
{{comments.comment}}