சென்னை: தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக தங்கம் விலை மிகப் பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்து ரூ.52,360க்கு விற்பனையாகிறது.
வெயில் காலத்தில் வெயில் மட்டும் அதிகரிக்கவில்லை. வெயில் எப்படி உயர்ந்து கொண்டே வருகிறதோ அதே போன்று நாளுக்கு நாள் தங்கம் விலையும் உயர்ந்து வருகிறது. நூற்றுக்கு மேற்பட்ட உலோகங்கள் இருந்தாலும், அதில் உயர்வான உலோகமாக இந்தியர்கள் பார்ப்பது தங்கத்தை தான். ஆதிகாலம் முதல் இன்று வரை இந்தியர்களின் வீடுகளில் நடைபெறும் ஒவ்வொரு விஷோங்களிலும், பண்டிகை கொண்டாட்டங்களிலும் முக்கிய இடம் பிடிப்பது தங்கம்.
தங்க நகைகளை வைத்து ஒருவரின் பொருளாதார நிலையும் மதிப்பிடப்படுகிறது. அந்த அளவிற்கு தங்கத்திற்கும், மக்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த உறவு இன்று நேற்று வந்த உறவல்ல ஆதி காலத்தில் இருந்து வந்தது என்று வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். மேலும் தங்கம் ஒரு சிறந்த முதலீடும் கூட. அலங்காரமாக போட்டுக் கொள்ளலாம்.. அவசரத்திற்கு அடகும் வைத்துக் கொள்ளலாம் என்பதால் தங்கம் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இத்தகைய தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கடந்த மார்ச் 29ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 51,000த்ஐ கடந்து, நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரி மறுநாள் குறைந்து விடும் என்று நினைத்த மக்களுக்கும் மீண்டும் பேரதிர்ச்சி அளிக்கும் விதத்தில் தொடர்ந்து நகை விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் எதில் கொண்டு போய் விடும் என்று தெரியவில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர்.
இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6545 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 45 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.360 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 52360 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7140 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57120 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை...
தங்கம் மட்டும் உயரவில்லை வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று ரூ.1.30 காசுகள் உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 85.30 காசுகளாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 682.40 ஆக உள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தை எதிர்க்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவித்து வருவது தான் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!
CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}