தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் : ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்வு

Mar 05, 2024,01:08 PM IST

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது.  அதுவும் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.680 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் நகைப்பிரியர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


விசேஷங்கள் நிறைந்த தை மாதத்தில் தங்கம் விலை குறைந்திருந்தது.இந்த விலை குறைவு நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்பதில் ஐயமில்லை. தற்போதைய மாசி மாதத்தில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது. மாசி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை அடைந்திருக்கின்றது. இந்த அதிரடியான விலை ஏற்றம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5945 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 70 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.680 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 47560 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6485 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.51,880 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608  உயர்ந்துள்ளது.


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்றை விட ரூ.1.20 காசுகள் உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 78.20 காசுகளாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 625.60 ஆக உள்ளது. 


தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். தங்கத்தின் தேவை அதிகரித்ததன் காரணமாக விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தாலும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக  நிபுணர்கள் தெரிவித்து  வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்