சென்னை: தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் விலை நேற்றும் இன்றும் உயர்ந்துள்ளது.
மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியிருப்பதால் வாடிக்கையாளர்கள் அடடா வடை போச்சே என்ற மன நிலையில் உள்ளனர்.
இன்று சவரனுக்கு ரூ. 40 அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தங்கம் விலை தாறுமாறாக ஏறும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5700 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45600 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6218 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 40 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.49774 ஆக உள்ளது.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.10 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 592.80 காசாக உள்ளது. தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதனால் சரிவில் இருந்த தங்கம் தேவை அதிகரித்ததன் காரணத்தினால் உயரத்தொடங்கியுள்ளது.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}