வெயிலுக்கு ஈக்வலாக தகிக்கும் தங்கம்.. சாதாரண மக்களை கலக்கத்தில் ஆழ்த்தும் விலை உயர்வு!

Mar 25, 2024,12:39 PM IST

சென்னை:  தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. இன்று சவரனுக்கு  ரூ.180 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் நகைப்பிரியர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாமானியர்களை இந்த நகை விலை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த சில மாதங்களாகவே நகை விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது தங்கம். எந்த  விஷேசம் என்றாலும் சிறிதளவாவது நகையின் பயன்பாடு இருந்து வருகிறது. இது சங்க காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை நடைமுறையில் இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட நகை சமீபகாலத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இது நடுத்தர மக்கள் மற்றும் சாமானி மக்களை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது.




நகை விலை ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என்று இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் நகை விலை உயரத்தான் செய்து வருகிறது.  நகை விலை குறைவு என்பது ஒரு கண் துடைப்பு போலவே இருந்து வருகிறது. இந்த நகை விலை உயர்வால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் காலத்தில் தாலிக்கு தங்கம் வாங்குவது என்பதும் குதிரை கொம்பாக மாறும் நிலைக்கு வந்துள்ளது.


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6205 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.180 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 49,640 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6769 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.54152 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.180 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.196 உயர்ந்துள்ளது.


தங்கம் மட்டுமா உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்தே தான் உள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று  0.30 காசுகள் உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 80.80 காசுகளாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 646.40 ஆக உள்ளது. 


தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத்தொடங்கியுள்ளனர். தங்கத்தின் தேவை அதிகரிப்பதன் காரணமாக, விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தாலும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக  நிபுணர்கள் தெரிவித்து  வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்