சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. சவரனுக்கு இன்று மட்டும் ரூ.1120 உயர்ந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு சவரன் ரூ. 51,000 கடந்து விட்டது தங்கத்தின் விலை. இந்த விலை ஏற்றத்தால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நகை வாங்குறதையே மறந்துடனும் போல என்று சாமானிய மக்கள் புலம்பி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே நகை விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி உயர்ந்து வந்த தங்கம் இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டு அனைத்து தரப்பினர்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு நாளைக்கு சவரனுக்கு அதிகபட்சமாக ரூ.600 வரை மட்டும் தான் உயர்ந்து வந்தது. ஆனால் இன்று ஒரே நாளில் ஆயிரத்தை கடந்து நகை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று கிராமிற்கு ரூ.140 உயர்ந்தது.. அதாவது ஒரு சவரனுக்கு ரூ.1120 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 51,000த்ஐ கடந்து, நகைப்பிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் காலத்தில் தாலிக்கு தங்கம் வாங்குவது என்பதும் குதிரை கொம்பாக மாறும் நிலைக்கு வரும் என்று கூறிய நிலை தற்பொழுது நடைமுறைக்கு வந்து விட்டதாக மக்கள் கூறிவருகின்றனர்.
இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6390 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 140 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.1120 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,120 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6971 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.55768 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1224 உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 3500 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை...
தங்கம் மட்டுமா உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்தே தான் உள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று 0.30 காசுகள் உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 80.80 காசுகளாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 646.40 ஆக உள்ளது.
திடீர் உயர்விற்குகான காரணம்
அமெரிக்க மற்றும் மத்திய வங்கி அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள், பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெறும் போர்கள், பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றால், கடந்த சில நாட்களாகவே உயர்ந்த தங்கம் இன்று வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தை எதிர்க்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவித்து வருவதும், தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர மற்றும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் தங்கத்தின் தேவை ஆகியவற்றால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் கூட வாய்ப்பு இருப்பதாக நகை கடை உரிமையாளர்கள் தெரிவத்து வருகின்றனர்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}