சென்னை: தங்கம் விலை நேற்றை விட இன்று 11 ரூபாய் உயர்ந்து காணப்பட்டது. வெள்ளி விலையும் 30 காசுகள் உயர்ந்து ஏறுமுகமாகவே இன்று காணப்படுகிறது.
தங்கம் விலை உச்சத்தில் இருப்பதினால் சமானிய மக்கள் தங்கம் என்றாலே தயக்கம் காட்டும் சூழல் எற்பட்டுள்ளது. இப்படியே போய்கொண்டிருந்தால் எப்படிப்பா என்று வடிவேலு ரேஞ்சுக்கு புலம்பும் நிலையில்தான் மக்கள் உள்ளனர்.
அதி விரைவில் தங்கம் சாமானிய மக்களுக்கு காட்சி பொருளாகவே மாறும் நிலை உருவாகி விடும் என்று கருதும் அளவுக்கு தங்கம் விலை ஹாட்டாகவே நீடித்து வருகிறது. அதேசமயம், அவ்வப்போது லேசாக இறங்கி சிரிக்க வைத்தும், திடீர் திடீரென உயர்ந்து நடுங்க வைத்தும் வருகிறது தங்கம்.
செப்டம்பர் 23ம் தேதி இன்றைய தங்கம் விலை 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5521 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 11ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44168 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6023 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 88 ரூபாய் அதிகமாகும். 1 கிராம் வெள்ளியின் விலை 79.30 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 30 காசுகள் அதிகரித்து உள்ளது.
ரேட் தெரிஞ்சுக்கிட்டீங்களா.. இப்ப கிளம்பிப் போங்க கடைக்கு!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
{{comments.comment}}