Gold rate: பண்டிகைக் காலம் வந்தாச்சு.. உயர்ந்தே காணப்படும் தங்கம் விலை..!

Dec 26, 2023,12:31 PM IST

சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நகை பிரியர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை நாட்கள் வருவதினால்  தங்கம் விலை சற்று உயர்ந்தே உள்ளது. இந்த விலை  உயர்வு நகை வாங்குபவர்களை கலக்கத்தில்  ஆழ்த்தினாலும், நகையின் தேவை இருப்பதினால் நகை வாங்கி வருகின்றனர். பண்டிகை காலம், முகூர்த்தம் வருவதால் நகை வாங்க நகை கடையில் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.


சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக  நிபுணர்கள் தெரிவித்து  வருகின்றனர். 




இந்த விலை உயர்வு பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5840 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 160 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46720 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.50,968 ஆக உள்ளது.


தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.30 காசுகள் அதிகரித்து ரூபாய்  79.50 காசாக  உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 636 காசாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்