சென்னை: கடந்த சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூ.160 குறைந்திருந்த தங்கம், இன்றும் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப்பியர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளியன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலையில் ஒரே நாளில் 3 முறை உயர்ந்தது. இந்த விலை ஏற்றம் நகைப்பிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது என்றாலும், வாடிக்கையாளர்கள் முன்னரே நகைகளை புக்கிங் செய்ததினால் இந்த விலை ஏற்றத்தில் இருந்து தப்பித்ததாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் அன்று ஒரு நாள் மட்டும் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்தது. அட்சய திருதிக்கு அடுத்த நாளான சனிக்கிழமை நகை விலை குறைந்திருந்தது. சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இன்றும் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,725 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 25 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.200 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,800 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,336 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,688 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
இன்றைய வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.50 காசுகள் குறைந்து ரூ.90 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 720 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.90,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் தருவதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று நகை விலை குறைந்து இருந்தாலும், தொடர்ந்து நகை விலை உயர்ந்து வருவதால், நகையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!
கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
{{comments.comment}}