வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.54,440த்திற்கு விற்பனை

Apr 12, 2024,12:39 PM IST

சென்னை: வரலாறு காணாத புதிய உச்சத்திற்கு தங்கம் விலை வந்துள்ளது. சென்னையில் விற்கப்படும் தங்கம் இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,440க்கு விற்கப்படுகிறது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தினாலும், இந்த விலை ஏற்றம் முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து நகையை வாங்கி முதலீட்டாளர்கள் சேமித்து வருவதால் தான் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்திய மக்கள் மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்கள் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவது தான் முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்படுகிறது.




சென்னையில் இன்றைய தங்கம் விலை...


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,805 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 80 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.640 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,440 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7424 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59392 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.704 உயர்ந்துள்ளது. 


சென்னையில் வெள்ளி விலை...


தங்கம் மட்டும் உயரவில்லை வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கடந்த சனிக்கிழமை இருந்த  விலையை விட இன்று  ரூ.1.50 காசுகள் உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 90 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 720 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500  உயர்ந்து ரூ.90,000த்திற்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்