சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம், வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்று மட்டும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமிற்கு 0.80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.95.80க்கு விற்கப்படுகிறது.
ஸ்ஸ்.. அப்பா இப்பவே கண்ணகட்டுதே. இந்த தங்கத்தையும் வெள்ளியையும் யார்டா கண்டுபிடிச்சது. ஒரு நாள் ஏறுது, ஒரு நாள் இறங்குது. அப்படி இருந்தாலும் அத வாங்கிறதுக்கு கூட்டமும் குறைஞ்ச பாடு இல்ல என்று நடுத்தர மக்களை நகை விலை புலம்ப வைத்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் வைகாசியில் விசேஷங்கள் வைத்திருப்பவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. மேலும், இந்தியா மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்களும் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவதினால் தான் நகை விலை ஏற்றம் கண்டு வருவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நகை விலையை பார்த்தால் தலை சுற்றி கீழே விழுந்து விடனும் போல... ம்ம்ம் சரி வாங்க இன்னக்கி என்ன விலைனு பார்ப்போம்...
இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,680 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 35 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.280 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,440 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,287 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,296 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 ஆக உள்ளது.
இன்றைய வெள்ளி விலை...
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி 0.80 காசுகள் உயர்ந்து ரூ.95.80 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 766.40 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை கடந்த சனியன்று ரூ.95,000 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.800 உயர்ந்து ரூ.95,800 விற்கப்படுகிறது.
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
{{comments.comment}}