தொடர்ர்ர் உயர்வில் தங்கம்.. வெள்ளி விலையும் விர் விர்.. கன்னத்தில் கை + கவலையுடன் வாடிக்கையாளர்கள்!

Sep 25, 2024,12:43 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து  ரூ.56,480க்கும், ஒரு கிராமிற்கு ரூ.60 உயர்ந்து  ரூ.7,060க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.இந்த நகை விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. எத்தகைய காரணங்கள் கூறப்பட்டாலும் இனி வரும் காலங்களில் நகை விலை குறைய வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு குறைந்த தங்கம் விலை, கடந்த ஒரு மாத காலமாக குறைவாகவே இருந்தது. இந்த விலை குறைவு என்பது வாடிக்கையாளர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி முதல் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுவும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் மிகவும் கவலையடைந்து வருகின்றனர். தற்போது தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ.60 அதிகரித்து ரூ.7,060 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,480 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.70,600 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,06,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,702 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,616 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77,020 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,70,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,702க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,717க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,702க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,000க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,636க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,702க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,702க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,707க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த வெள்ளி இன்று உயர்ந்துள்ளது. அதுவும் இன்று ஒரு நாள் மட்டும் கிராமிற்கு ரூ.3 அதிகரித்து உள்ளது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1010 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்