சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆட்டுச் சந்தைகளில் ஆடு விற்பனை பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் தொடங்கியதும் பிறை பார்த்து நோன்பு திறந்து கடுமையான விரதம் இருப்பார்கள். தொடர்ந்து 30 நாட்கள் விரதத்தை முடித்து ரமலான் மாத இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் வரும் திங்கட்கிழமை உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அப்போது மசூதிகளிலும், வீடுகளிலும் , இஸ்லாமிய மக்கள் தங்கள் உறவினர்களுடன் ஒன்று கூடி, தொழுகை சிறப்பு வழிபாடுகளை நடத்தி ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொள்வர். அது மட்டுமல்லாமல் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு விருந்துகளும் ஏற்பாடு செய்து சக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உபசரித்து அன்பை பகிர்ந்து கொள்வார்கள்.
இதற்காக வரும் மார்ச் 31ஆம் தேதி திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கு இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர்.
அதேபோல் ரம்ஜான் பண்டிகை எதிரொலியால் நாடு முழுவதும் உள்ள கால்நடை சந்தைகளில் ஆடு விற்பனை களைகட்டி உள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் வாரச்சந்தையில் நேற்று லட்சக்கணக்கான ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு வந்து இறங்கியது. இதனை வாங்க இன்று அதிகாலை முதல் வியாபாரிகள் பெருமளவு ஒன்று திரண்டனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆடு கோழி வியாபாரம் சூடு பிடித்து ஒன்பது மணிக்கே விற்பனை நடந்து முடிந்தது. இந்த அய்யலூர் சந்தையில் மட்டும் ரூபாய் இரண்டு கோடி ரூபாய் விற்பனை நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு உள்ளூர் மக்கள் மற்றும் இன்றி சுற்று வட்டாரத்தில் உள்ள வெளியூர் வியாபாரிகளும் விவசாயிகளும் வந்து ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஆடு விற்பனை களைகட்டி உள்ளது. பொதுவாக வாரந்தோறும் ஒரு கோடி ரூபாய் வரைக்கும் விற்பனை நடைபெற்று வரும் இந்த சந்தையில், ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ரெண்டு கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் கடந்த வாரம் ஒப்பீடு செய்கையில், தற்போது தேவை அதிகரித்துள்ளதால் இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு ஆட்டிற்கு ரூபாய் 1000 முதல் 1500 வரை விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை அதிகரித்தாலும் ஆடு விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல் நெல்லை மாவட்டம் வள்ளியூர் வார சந்தையில் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட வெளியூர் வியாபாரிகளும் உள்ளூர் வியாபாரிகளும் ஆடுகளை போட்டி போட்டு வாங்கினர். இங்கு செம்மறியாடு, வெள்ளாடு, கிடாய் போன்ற ஆடுகள் குறைந்தபட்சம் ரூபாய் 6000 முதல் அதிகபட்சம் 40,000 வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூபாய் 2 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடைபெற்று உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வாரச்சந்தையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஆடு விற்பனை ரூபாய் 5 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் திருமங்கலம், பெரம்பலூர், வேப்பூர், ஆகிய ஆட்டுச் சந்தைகளிலும் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஒட்டுமொத்தமாக பல கோடி ரூபாய் வியாபாரம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . குறிப்பாக கிருஷ்ணகிரி சந்தையில் மட்டும் இன்று ரூபாய் 10 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}