சென்னை: தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கோட் படம் இன்று திரைக்கு வந்து ரசிகர்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. வெடி வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடனும், மேள தாளங்கள் முழங்க தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.
ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்துள்ளார். இதில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதே வேளையில் இப்படத்தில் நடிகை திரிஷா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாகவும், மறைந்த விஜயகாந்த அவர்கள் ஏயை தொழில்நுட்பத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இது தவிர படக்குழுவினர் முன்கூட்டியே படத்தின் கதைக்களத்தை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வந்தனர். இதன் காரணமாக படம் எப்போது வெளியாகும் கோட் படத்தை உடனே திரையில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்து வந்தது.
அதிகாலைக் காட்சிகள்:
கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே கோட் படம் திரையிடப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் மட்டும் அதிகாலை காட்சிக்கு அனுமது இல்லை. இதனால் இந்த மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வசிக்கும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று அதிகாலை காட்சியை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
காலை 9 மணி அளவில் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை ஆரவாரத்துடன் வரவேற்று ரசிகர்கள் வெடி வெடித்து மேள தாளங்கள் முழங்க கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு இன்று ஒரு நாள் கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுத்துள்ளது . இதனால் ரசிகர்கள் முதல் காட்சியைக் கண்டு ரசிக்க திரையரங்குகளை நோக்கி படையெடுத்து தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
படம் பார்க்க வந்த சிவகார்த்திகேயன்:
இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலர் ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கோட் படத்தை கண்டு களித்தனர். அதேபோல நடிகை திரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ரோகினி தியேட்டரில் படம் பார்த்து மகிழ்ந்தனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் பெருளவிலான திரைகளில் கோட் படம் இன்று வெளியானது. ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். கேரள ரசிகர்களையும் கோட் கவர்ந்து விட்டது. "வேற லெவல், வெங்கட் பிரபு தரமா செஞ்சுட்டாரு. படம் ஹிட்டுங்க. இது என்ன தமிழ்நாடா. கேரளா தியேட்டரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி எப்படி பறக்குதுன்னு பாருங்க. அப்பொழுதே தெரிய வேண்டாமா விஜய் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கும்" என்று என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குத்தாட்டம் போட்ட கேரளா பாட்டி:
ரசிகர்கள் மட்டும் தான் கோட் திரைப்படத்தை கொண்டாட வேண்டுமா என கேரளாவில் ஒரு பாட்டியும் இளைஞர்களுக்கு இணையாக குத்தாட்டத்தில் இறங்கி கோட் படத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
கர்நாடகாவிலும் பல்வேறு திரையரங்குகளில் கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியானது. இதனைக் காண அதிகாலையிலேயே திரளான ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
{{comments.comment}}