பாக்ஸ் ஆபீஸை புரட்டிப் போட்ட கோட்.. முதல் நாளில் ரூ. 126 கோடி வசூல்.. அறிவித்தார் அர்ச்சனா கல்பாத்தி

Sep 06, 2024,05:41 PM IST

சென்னை: 2024ம் ஆண்டின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது விஜய் நடித்த கோட். முதல் நாளிலேயே இப்படம் உலகளவில் ரூ. 126.32  கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேசமயம், விஜய்யின் முந்தைய லியோ பட முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்க தவறி விட்டது கோட்.


தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகியுள்ள கோட் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் கூட மிகப் பெரிய ஓப்பனிங்கைக் கொடுத்துள்ளது. முதல் நாளில் 99 சதவீத இருக்கைகள் நிரம்பிய நிலையில் மிகப் பெரிய பிளாக்பஸ்டராக மாறியுள்ளது. முதல் நாளிலேயே இப்படம் உலக அளவில் ரூ. 126.32 கோடியை அள்ளியுள்ளது.  லியோ படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 148 கோடியாகும். அந்த வகையில் கோட், லியோவுக்கு அடுத்த இடத்தையே பிடித்துள்ளது.




மிகப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் கோட். வித்தியாசமான கதைக்களத்துடன் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள கோட், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. அதிக அளவிலான திரைகளிலும் கோட் படம் திரையிடப்பட்டது. கோட் படத்திற்கு, சென்னையில் 1003 ஷோக்கள் முதல் நாளில் இடம் பெற்றிருந்தது. பெங்களூரில் 1140 ஷோக்கள் காட்டப்பட்டுள்ளன. இது சென்னையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக கோட் உருவெடுத்துள்ளது. தற்போது உள்ள அதே அளவிலான கூட்டம் தொடர்ந்து நீடித்தால் இன்னும் சில நாட்களில் இப்படத்தின் வசூல் ரூ. 500 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படம் உலக அளவில் ரூ. 618 கோடியை வசூல் செய்தது. அந்த சாதனையை கோட் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


கோட் படம் முதல் நாளில் ரூ. 126 கோடியை வசூல் செய்ததை தற்போது ரசிகர்கள் தடபுடலாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்