சென்னை: விஜய் நடித்த கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக தயாராக உள்ள நிலையில் இப்படத்தின் அசத்தலான அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதை விட சூப்பரான மேட்டரை அவரது தம்பியும், நடிகருமான பிரேம்ஜி கொடுத்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் படத்தில் நடிகர் விஜய் தந்தை, மகன் என்ற இரண்டு வேடங்களில் நடித்து முடித்துள்ளார். இவருடன் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, வைபவ், அஜ்மல், அரவிந்த், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தியுள்ளனர்.
இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக தயாராக உள்ளன. தமிழக மற்றும் கேரளாவில் ஓப்பனிங் ஷோவை காண ரசிகர்கள் நான் நீ என போட்டா போட்டுக்கொண்டு இப்படத்திற்கான டிக்கெட்டுகளை புக்கிங் செய்து வருகின்றனர். மேலும் இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வரும் நிலையில் இப்படத்தை கொண்டாடவும் தயாராகி வருகின்றனர்.
ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையே வெளியாக தயாராக இருக்கும் கோட் படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷனுக்காக இப்படத்தின் அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரேம்ஜி, நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நிறைய உள்ளன. தமிழ் சினிமாவில் இதற்கு முன் எந்த படத்திலும் இது போன்ற ஆச்சரியங்களை பார்த்திருக்க மாட்டீர்கள். ஒவ்வொரு சீன்களுக்கும் விசில் அடிப்பீர்கள். நான் படத்தை நிறைய தடவை பார்த்து விட்டேன் என கூறியிருந்தார்.
சிஎம் 2026
அதேபோல இன்னொரு சூப்பரான மேட்டரையும் சொல்லியுள்ளார் பிரேம்ஜி. அதாவது அப்படத்தில் வரும் காரின் நம்பர் 2026 அதுவும் சாதாரண 2026 இல்லை, சிஎம் 2026. காருல நானும் தளபதியும் உட்கார்ந்திருப்போம் அப்படின்னு சொல்லி அவர் ஜாலியாக ஒரு ஆட்டமும் போட்டு குஷியைக் கிளப்பியுள்ளார்.
அதேபோல் இப்படத்தில் யுவன்சங்கர் ராஜா இசைக்கும் எதிர்பார்ப்பு வலுத்துவரும் நிலையில் படத்தின் முதல் மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து படத்தின் மட்ட என்ற நாலாவது சிங்கள் நேற்று முன்தினம் வெளியானது. இப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்றதோடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்று வசூலில் சாதனை படைக்கும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வேற வெர்ஷன் விசில் போடு
இந்த நிலையில் கோட் படத்தின் பாடல்கள் குறித்த ஒரு அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபுவுமம் வெளியிட்டுள்ளார். அதில் கோட் படத்தின் விசில் போடு என்ற பாட்டு தான் ஓபனிங் பாடல்.. ஆனால் நீங்கள் கேட்ட வெர்ஷன் படத்தில் இருக்காது. அந்தப் பாடலின் திருவிழாக்கோலமான மற்றொரு வெர்ஷன் தான் தியேட்டரில் நீங்க பார்க்கப் போறீங்க என்ற அப்டேட் ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இதற்கிடையே நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் முதல் மாநாடு குறித்த ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
{{comments.comment}}