ஞானசேகரனுக்கு வலிப்பு இல்லையாம்.. டிராமா போட்டிருக்கார்.. மீண்டும் துருவும் சென்னை போலீஸ்!

Jan 23, 2025,12:51 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை் நடத்தி வருகின்றனர். அவர் வலிப்பு வந்தது போல நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது.


சென்னை அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய கோட்டூர்புரம் போலீஸார், ஞானசேகரன் என்ற நபரை கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி ஞானசேகரன் போனில் சார் என குறிப்பிட்டதாகவும், இதனால் யார் அந்த சார் என்ற விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் பேசப்பட்டது. ஆனால் இது எல்லாவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் திட்டவட்டமாக மறுத்தார். ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை என்றும் வெறும் அனுதாபிதான் என்றும் அவர் விளக்கியிருந்தார்.




இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு விசாரித்து வருகிறது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ஞானசேகரன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கின் எப்ஐஆர்  வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் கடந்த 20ம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார். 7 நாட்கள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர்  எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர். 2வது நாள் விசாரணையின் போது நேற்று அதிகாலை 3 மணியளவில் ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.


இதனையடுத்து, ஞானசேகரன் ஸ்டாலின் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அப்போது டாக்டர்கள் மேற்கொண்ட சோதனையில், வலிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது நாடகம் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கிறதா பாஜக?.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பரபர முடிவுகள்

news

இப்பவே தலை தூக்கும் வெயில்.. இன்றும், நாளையும் அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி வரை உயர வாய்ப்பு

news

கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. 3 ஆசிரியர்கள் அதிரடி கைது!

news

திருப்பரங்குன்றத்தை வைத்து.. திமுக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்த முயல்கிறது பாஜக.. அமைச்சர் சேகர்பாபு

news

திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் மென்மையாக இருக்கக் கூடாது.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

news

படகில் சென்று.. திரிவேணி சங்கமத்தில்.. 3 முறை புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

news

அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

news

144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!

news

சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்