"பில்லியன்" கிடைத்தும்.. மனசெல்லாம் வெறுத்துப் போன "கில்லியன்".. பணம் படுத்திய பாடு!

Jan 17, 2024,09:05 AM IST

லண்டன்: பணம் படுத்தும் பாடு என்று சொல்வார்கள்.. பிணமாக இருந்தாலும் பணத்தைப் பார்த்தால் வாய் திறக்கும் என்பார்கள்.. அந்த அளவுக்கு உலகிலேயே மோசமான ஒரு அபாயம் எது என்றால் அது பணம்தான். அந்தப் பணத்தால் அருமையான உறவுகளைத் தொலைத்து விட்டு வெறுத்துப் போய் இருக்கிறார் ஒரு பெண்.


இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கில்லியன் பேபோர்ட். இவருக்கு 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈரோ மில்லியன்ஸ் லாட்டரியில் ரூ. 1551 கோடிக்கு பிரைஸ் கிடைத்தது.. தனது வாழ்க்கையே வசந்தமாகப் போகிறது என்று நினைத்து மகிழ்ந்து குதூகலித்தார் கில்லியன்.. ஆனால் அதற்குப் பிறகு நடந்தது அவரை அதிர வைத்தது.. அட என்னடா வாழ்க்கை இது என்று வெறுத்துப் போகும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.




அப்படி என்னதான் நடந்தது.. அதை கில்லியனே இப்போது  சொல்லியுள்ளார்.


மிகப் பெரிய அளவில் அவருக்கு பணம் பரிசாக கிடைத்ததைத்  தொடர்ந்து அவரை விட்டு விலகியிருந்த பல உறவுகளும் கூட, அவரை நோக்கி வரத் தொடங்கினர்.. பாசத்தால் அல்ல, பணத்தை அடைவதற்காக. அனைவருமே அவரிடமிருந்து அந்தப் பணத்தை எப்படி அடைவது என்பது மட்டுமே குறியாக இருந்தது.


கில்லியனின் கணவரும் அவர்களில் ஒருவர். கணவருக்கும் இந்த லாட்டரிப் பரிசில் பங்கு இருந்தது. ஆனால் பெருமளவிலான பணத்தைக் கேட்டு நிர்ப்பந்திக்க ஆரம்பித்தார் கில்லியனின் கணவர். இதனால் வெறுத்துப் போன கில்லியன், தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்.


தன்னிடம் ஏதேதோ காரணங்களைக் கூறி பணம் கேட்டு நெருக்கிய உறவுகளுக்கு மொத்தமாக 25 மில்லியன் டாலரைக் கொடுத்தார் கில்லியன். பிறகு தனது கடன்களை அடைத்தார். இந்தக் கடன்களும்  கூட அவர் வாங்கியதில்லையாம். நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள்தானாம்.


குடும்பத்தினர் வாங்கிய கடன்களுக்காக மட்டும் 13 லட்சத்து 24 ஆயிரத்து 304 டாலர் பணத்தை அவர் செலவிட்டுள்ளார்.  அவரது தந்தை, சகோதரர் காலின் ஆகியோர் வாங்கிய கடன்களும் இதில் அட்கம். தொடர்ந்து தனது குடும்ப உறவுகளுக்கு பணம் கொடுத்துக் கொண்டே வந்துள்ளார். தனது பெற்றோருக்காக கிழக்கு ஸ்காட்லாந்தில் பிரமாண்ட வீடு ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். 




இத்தனை செய்தும் உறவுகள் விடவில்லையாம். தொடர்ந்து பணம் கேட்டுக் கொண்டே நச்சரித்திருக்கிறார்கள்.  ஒரு கட்டத்திற்கு மேல் கில்லியன் பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார். அவ்வளவுதான்.. அதுவரை அவரிடம் பேசிக் கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக பேச்சை நிறுத்தி விட்டு விலக ஆரம்பித்துள்ளனர். பணம் தராவிட்டால் உறவு இல்லை என்ற ரீதியில் அவர்கள் விலகவே, அப்போதுதான் உறவினர்களின் பணத்தாசை புரிந்து அதிர்ந்தும், வேதனையில் மூழ்கியும் உள்ளார் கில்லியன்.


பெற்ற தாய் தந்தையே கூட கில்லியனுடன் பேசுவதை நிறுத்தி விட்டனராம். சகோதரர் பேசுவது கிடையாதாம். கணவரும் விலகி விட்டார்.  யாருக்கெல்லாம் தான் பணம் கொடுக்க மறுத்தாரோ அவர்கள் எல்லாம் விலகவே வெறுத்துப் போய் விட்டாராம் கில்லியன்.


எல்லோரையும் இந்தப் பணம் மகிழ்ச்சிப்படுத்தும் என்றுதான் நான் நினைத்தேன்.. ஆனால் என்னுடைய மகிழ்ச்சியையும், உறவுகளையும் இந்தப் பணம் கொண்டு போய் விட்டது என்று விரக்தியுடன் கூறுகிறார் கில்லியன்.


"பில்லியன்" இருந்து என்ன பயன்.. "மில்லியன்" கிடைத்தும் என்ன பலன்.. கடைசியில் "கில்லியன்" வெறுத்துப் போய்ட்டாரே!

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்