கோவாவில் அடுத்த மாசம் கல்யாணம்.. திருப்பதியில் சந்தோஷமாக சேதி சொன்ன கீர்த்தி சுரேஷ்!

Nov 29, 2024,05:16 PM IST

திருப்பதி: அடுத்த மாதம் கோவாவில் எனக்கு திருமணம் என்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வீட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பைரவா, ரஜினிமுருகன், ரெமோ, சர்க்கார், மாமன்னன், சண்டைக்கோழி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் அவர் இடம் பிடித்துள்ளார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார். 


கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்  ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.  விரைவில் இந்த படம் ரிலீசாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். தெறி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை அட்லி தயாரிக்க காலீஸ் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.




இந்நிலையில், கடந்த 27ம் தேதி சமூக வலைத்தளத்தில் தனது காதலர் ஆண்டவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, 15 ஆண்டுகால உறவு, எப்போதும் தொடரும் கவுண்டிங்... ஆண்டனி-கீர்த்தி என குறிப்பிட்டு தனது காதலரை அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து, இன்று  தனது குடும்பத்தாருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு அடுத்த மாதம் கல்யாணம். அதற்காக சாமி தரிசனம் செய்ய வந்தேன். திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்