மழை வெள்ளத்தால் பாதிப்பு.. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்.. நாளை பொது விடுமுறை!

Dec 18, 2023,08:11 PM IST

- மஞ்சுளா தேவி


திருநெல்வேலி: நெல்லை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடும் வெள்ள பாதிப்பு தொடர்வதால், இரு மாவட்டங்களிலும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வளிமண்டல சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு ஏரிகள் உடைந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 


இதனால் தண்ணீர் மளமளவென கிராமம் நகரம் என ஒரு இடம் கூட விட்டு வைக்காமல் சூழ்ந்து தீவு போல் காட்சியளிக்கிறது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.




நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இன்று அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நாளையும் கனமழை தொடரும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. 


ஏற்கனவே வெள்ளம் போல மழை நீர் சூழ்ந்திருப்பதால், தண்ணீர் வடிந்து நிலைமை சீராக இன்னும்  ஒரு வாரம் ஆகும். இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறையாக அரசு அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்