டெல் அவிவ்: இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையிலான போர் மேலும் மோசமடைகிறது. தரை வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ள நிலையில் மறுபக்கம் ஹமாஸுக்கு ஆதரவாக தாங்களும் போரில் குதிக்கத் தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
ஹமாஸ் மீது இஸ்ரேல் படையினர் தொடர்ந்து 8 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், ஆண்கள் என பலதரப்பட்டவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
மின்சாரம், குடிநீர், உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய சேவைகளை காசா பகுதிக்கு கிடைக்காத வகையில் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியதுடன் தொடர் குண்டுமழை பொழிந்து, காசா மக்களை கடுமையாக தாக்கி நிலைகுலைய செய்துள்ளது. இந்த குண்டு மழையில் ஏராளமான கட்டிடங்கள் சிதைந்து இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்துள்ளது.
உணவு, உடை, இருப்பிடம் இவை அனைத்தையும் இழந்த மக்கள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலை தாங்காத காசா பகுதி மக்கள் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமனோர் வெளியேறி உள்ளனர். இந்த தீவிர போரில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அங்கு தற்போது பீரங்கிகளையும் ராணுவ வீரர்களையும் இஸ்ரேல் குவித்து தரை வழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடக்கும் போர் தீவிரமடைந்து தரை வழி போராக நடந்தால் பாதிப்புகள் அதிகமாகும் என்பதால், இந்தத் தாக்குதலை தவிர்க்குமாறு உலக நாடுகள், கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இஸ்ரேல் அதை கேட்கவில்லை. தற்போது தாக்குதலைத் தொடங்கியுள்ளதால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஹிஸ்புல்லாவும் குதிக்கிறது
இதற்கிடையே ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் குதிக்க தயார் என்று அறிவித்துள்ளது. ஈரான் ஆதரவு போராளி அமைப்புதான் ஹிஸ்புல்லா. லெபனான் நாட்டிலிருந்து இது செயல்படுகிறது. இந்த அமைப்பு அவ்வப்போது இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது முழு அளவில் ஹமாஸுடன் இணைந்து போர் புரிய தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் துணைத் தலைவர் நயீம் குவாசிம் கூறுகையில், நாங்கள் ஹமாஸுக்குத் தொடர்ந்து உதவி வருகிறோம். இந்த உதவிகள் தொடரும். எங்களது இலக்குகள் நிறைவேறும் வரை இது தொடரும். முழு அளவிலான போருக்கும் நாங்கள் தயார். நடவடிக்கையில் இறங்கும் நேரத்தில் நாங்கள் இறங்குவோம் என்று கூறியுள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}