டெல்லி: 90களில் ஆடும் கிரிக்கெட் போல ஆடினால் எப்படி .. இப்படித்தான் இறுதிப் போட்டிக்கான வியூகம் வகுப்பதா என்று இந்திய கிரிக்கெட் அணியை வறுத்தெடுத்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கெளதம் கம்பீர்.
குறிப்பாக கே.எல். ராகுலின் பேட்டிங்கை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 3வது உலகக் கோப்பைக் கனவை பறி கொடுத்து விட்டு நிற்கிறது இந்தியா. லீக் போட்டிகளில் அசத்தியது.. அரை இறுதிப் போட்டியில் மிரட்டியது.. எனவே இறுதிப் போட்டியிலும் வெற்றி உறுதி, கப் வெல்வது உறுதி என்று பலரும் ஆசையுடன் காத்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட கப் நம்தே என்று உற்சாகமாக சொல்லியிருந்தா். ஆனால் எல்லாமே மண்ணாகி விட்டது.
அதீதமாக ஆசைப்பட்டு காத்திருந்த ரசிகர்கள்தான் பாவம் ரொம்ப ஏமாந்து போய் விட்டனர். இந்த நிலையில் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடிய விதம் குறித்து முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது.
இறுதிப் போட்டி என்பது இரு பக்கமும் கூர்மையாக உள்ள கத்தி போன்றது. நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். மிகவும் வீரத்துடன் போராடும் அணியே கோப்பையை வெல்லும் என்று. இப்போது அது புரிந்திருக்கும். 11 முதல் 40 ஓவர்களுக்குள் நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த வேண்டியது மிக மிக அவசியம். அதுதான் அணிக்கு வலுவான நிலையை ஏற்படுத்தும். அந்த ரிஸ்க்கை யாராவது எடுத்திருக்க வேண்டும்.
சொல்லப் போனால் இந்தியா இன்னும் குறைவான ஸ்கோரில் அவுட்டாகியிருக்க கூடும். அந்த அபாயமும் இருந்தது. இந்திய அணியின் 6 முதல் 7 டாப் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். அவர்களிடம் அக்ரசிவ்வான மனப்பான்மை இல்லை. 240 ரன்களை டிபன்ட் செய்ய முடியும் என்று நினைத்தால், அது சரியான பார்வை அல்ல. அங்குதான் இந்தியா தவறி விட்டது. போட்டிக்கு முன்பாகவே நாம் அக்ரச்சிவாக இருக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா வீரர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும்.
விராட் கோலி, இன்னிங்ஸை நிலை நிறுத்தும் பொறுப்பை சரியாக செய்தார். இந்தப் போட்டி மட்டுமல்ல, இந்தத் தொடர் முழுவதுமே அதை அவர் சரியாகவே செய்தார். எனவே மற்ற பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும். குறிப்பாக கே.எல். ராகுல் 107 பந்துகளைச் சந்தித்து 66 ரன்கள் எடுத்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. இப்படித்தான் விளையாடுவதா.. இது 90களில் ஆடும் கிரிக்கெட்.
ஒன்று அடித்து ஆடி 150 ரன்களில் அவுட் ஆகியிருக்கலாம்.. இல்லையா நிலைத்து ஆடி 300 ரன்களை தாண்டியிருக்க வேண்டும். இரண்டும் கெட்டானாக ஆடியிருக்கிறார்கள். 240 என்பது போதுமான ஸ்கோரே கிடையாது. 300 ரன்களுக்கு மேல் போயிருக்க வேண்டும். அதை எடுக்கும் தைரியம் இந்தியாவிடம் இல்லாமல் போய் விட்டது என்றார் கம்பீர்.
2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல கெளதம் கம்பீர் அதிரடியாக விளாசிய 97 ரன்கள்தான் காரணம் என்பது நினைவிருக்கலாம்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}