- கெளதம் அதானி
உலக பாக்ஸிங் சாம்பியன் மைக் டைசன் இந்தியாவில் இரண்டு இடங்களுக்குச் செல்ல விரும்பினார். ஒன்று தாஜ் மஹால்.. இன்னொன்று தாராவி.
தாராவிக்கும் எனக்குமான முதல் தொடர்பு 70களின் பிற்பகுதியில் உருவானது. அப்போது நான் மும்பைக்கு புதிதாக இடம் பெயர்ந்திருந்தேன். தனக்கென ஒரு பிழைப்பையும், வாய்ப்பையும் தேடிச் சுற்றித் திரிந்த இளைஞர்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். எனது ஒரே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைரத் தொழிலில் எப்படியாவது பெரியாளாகி விட வேண்டும் என்பதுதான்.
இப்போது இருப்பது போலவேதான் அப்போதும் தாராவி இருந்தது. பல மொழி பேசுவோர், பன்முகக் கலாச்சாரம், பல்வேறு மத நம்பிக்கைகள் என்று குட்டி இந்தியாவாக இருந்தது தாராவி. தாராவியின் மூலை முடுக்கெல்லாம் எல்லா இந்திய மொழி பேசுவோம் சம உரிமையுடன் இருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். மும்பையின் தொழில் பிரமாண்டத்துக்கு மத்தியில் தாராவி எனக்கு ஆச்சரியத்தையே அளித்தது. ஆனால் தாராவியில் நான் கண்டது என்னவென்றால் ஒரு ஒழுங்கு இருந்தது. அதுதான் தாராவியின் ஆன்மாவும் கூட. அதை என்னால் விவரிக்க முடியவில்லை. ஆனால் உணர்ந்தேன்.
ஆனால் அங்கு நான் போனபோது அங்குள்ள மக்கள் வாழ எத்தனை சிரமப்படுகின்றனர் என்பதை எனக்கு உணர்த்தியது. வாழ்க்கைக்காக பெரும் போராட்டங்களை சந்திக்கும் நிலை இருந்தபோதும் அவர்கள் எளிமையாகவும், ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது எனக்கு உத்வேகம் அளித்தது. ஆனாலும் எனது மனதுக்குள் ஒரு கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. இவர்களது தலைவிதி எப்போது மாறும்?
இப்போதும் கூட அந்தக் கேள்வியும், தாராவி குறித்த ஆச்சரியமும் அப்படியேதான் இருக்கிறது. தனது மறு சீரமைப்புக்காக தாராவி இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் தாராவியை மறு சீரமைக்கும் வாய்ப்பு என்னைத் தேடிவந்தது. அதை நழுவ விட நான் விரும்பவில்லை. மாறாக இரு கைகளாலும் அந்த வாய்ப்பு இறுகப் பற்றிக் கொண்டேன். தாராவி எனது உணர்வு சம்பந்தப்பட்டது. மும்பை மீது எனக்குப் பிரியம் ஏற்பட முதல் சந்தர்ப்பம் தாராவிதான். எனவேதான் தாராவியை மறு சீரமைக்கும் வாய்ப்பை நான் சந்��ோஷத்துடன் பெற்றுக் கொண்டேன். இதற்கான ஏலத்தில்கூட நான் 2.5 மடங்கு அதிக தொகையை செலவிட்டேன். எனக்கே அது கிடைக்க வேண்டும் என்ற வேட்கைதான் அதற்குக் காரணம்.
பெருமை மற்றும் நோக்கத்தின் புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது. புதிய தாராவியை கெளரவத்துடனும், பாதுகாப்புடனும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றியமைக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தில் நாம் இருக்கிறோம். இதில் நாங்கள் ஈடுபடும் முன்பு இதில் உள்ள மாபெரும் சவால்களையும் நாங்கள் மனதில் கொண்டுள்ளோம். சிங்கப்பூரை 1960களில் சீரமைக்க முயன்றபோது எழுந்த சவால்களை விட மிகப் பெரிய சவால் தற்போது தாராவியில் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
முதலில், உலகிலேயே மிகப் பெரியநகர்ப்புற குடிசைப் பகுதி இங்குதான் உள்ளது. கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இங்கிருந்து மறு குடியேற்றம் செய்யப்பட வேண்டும். இது அசாதாரணமான பணியாகும்.
2வது, வெறும் வீடுகள் மட்டும் இங்கு இல்லை. மிகப் பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள், சிறு சிறு வணிகங்கள் நிறைய உள்ளன. இவற்றையும் மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அவர்களுக்கான சூழலை உருவாக்க வேண்டும்.
3வது தகுதி வாய்ந்த, தகுதி இல்லாத என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொருத்தமான, மறு வளர்ச்சித் திட்டங்களை நாம் செய்தாக வேண்டும்.
என்னிடம் இப்போது எந்தத் திட்டமிட்ட ஐடியாவும் இல்லை. நோக்கமும் இல்லை. அதேசமயம், தாராவி மக்களுக்கு மனிதாபி��ான முறையில் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மனதில் கொண்டு மிகச் சிறந்ததை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் நான் உள்ளேன். அவர்களது கருத்துக்களுக்கும், யோசனைகளுக்கும் உரிய மதிப்பு கொடுக்கப்படும். தாராவி மக்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மும்பைவாசியும் தனது கருத்தைக் கூற வாய்ப்பு அளிக்கப்படும். புதிய தாராவியானது, மும்பையின் முக்கியகுண நலனை, வேற்றுமையிலும் ஒற்றுமையை, இன மொழி பாகுபாடில்லாத சமுதாயத்தை பிரதிபலிப்பதாக அமையும். பழைய தாராவியின் ஆன்மா கெடாமல் இதை நாங்கள் செய்வோம்.
இங்கு நாங்கள் அதி நவீன உலகத் தரம் வாய்ந்த நகரையும் நிர்மானிக்கப் போகிறோம். அது 21வது நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் இருக்கும்.
தாராவி மக்களுக்கு அவர்களது விருப்பப்படியே வீடுகள் கட்டித் தரப்படும். அவர்கள் கண் முன்பாகவே வீடுகள் கட்டித் தரப்படும். அவர்களுக்கு வெறும் வீடுகளை மட்டுமல்லாமல், சமையல் எரிவாயு, குடிநீர், மின்சாரம், கழிவறை வசதிகள், சுகாதார வசதிகள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட அனைத்துமே கொடுக்கப்படும். பள்ளிக்கூடம், உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனையும் தாராவி மக்களுக்கு கொடுக்கப்படும். இல்லாமை என்ற பழைய தாராவியின் நிலைமை மாறி இல்லாதது இங்கில்லை என்ற புதிய தாராவியை நாங்கள் கட்டியமைக்கப் போகிறோம்.
கடந்த 50 வருடமாகவே தாராவியை மறு சீரமைக்கும் முயற்சிகள் கை கூடாமலேயே உள்ளன.இந்த முறை அது நிறைவேறும். அதற்கேற்ப டென்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு சந்தித்த பிரச்சினைகளிலிருந்து கிடைத்த பாடத்தை அடிப்படையாக வைத்து திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், தகுதி இல்லாதவர்களுக்கும் கூட மறு சீரமைப்பில் இடம் தரப்பட்டுள்ளது.
எல்லாம் முடிந்த பின்னர் தாராவிக்கு மைக் டைசன் வந்தால் நிச்சயம் அவர் இதை தாராவி என்று நம்ப மாட்டார். அவரால் அடையாளம் காண முடியாது. ஆனாலும் தாராவியின் அந்த ஆன்மாவை அவரால் நிச்சயம் உணர முடியும், அடையாளம் காண முடியும். கடவுள் விருப்பப்பட்டால் இந்த தாராவியிலிருந்து ஏராளமான மில்லியனர்கள் உருவாவார்கள்.. அவர்களது பெயர்களுக்குப் பின்னால் இனியும் ஸ்லம்டாக் என்ற அடைமொழி இருக்காது.
நன்றி: Adani Group
(மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியை 618 மில்லியன் டாலர் பொருட் செலவில் புதுப்பிக்கும் திட்டத்தை கெளதம் அதானியின் அதானியின் ரியல் எஸ்டேட் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இதற்கான அரசு அனுமதியையும் அந்த நிறுவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக அதானி எழுதியுள்ள கட்டுரைதான் இது)
{{comments.comment}}