பயங்கர தாதா  தீபக் "பாக்ஸர்".. மெக்சிகோவில் வைத்து தூக்கிய டெல்லி போலீஸ்!

Apr 06, 2023,12:33 PM IST
டெல்லி: பிரபல தாதா தீபக் பாக்ஸரை மெக்சிகோவில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளது டெல்லி போலீஸ். அவரை விமானம் மூலம் டெல்லிக்கு போலீஸ் குழு கொண்டு வந்துள்ளது.

தீபக் பாக்ஸர் டெல்லியிலிருந்து மெக்சிகோ செல்வதற்கு இன்னொரு தாதா உதவியுள்ளார். இதற்காக ரூ. 55 லட்சம் வரை செலவு செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.



மெக்சிகோவிலிருந்து இஸ்தான்புல் வழியாக தீபக்கை டெல்லி போலீஸ் குழுவினர் கொண்டு வந்துள்ளனர். வெளிநாடு ஒன்றில் டெல்லி காவல்துறைக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது டெல்லிபோலீஸாரால் கூறப்படுகிறது.

இந்தியாவிலிருந்து மெக்சிகோவுக்குத் தப்பிச் சென்ற தீபக், அங்கிருந்து அமெரிக்காவுக்குள் தப்பிச் செல்ல முயன்று வந்தார். அங்கிருந்தபடியே தனது டெல்லி கும்பலை இயக்கவும் திட்டமிட்டிருந்தார். கிட்டத்தட்ட தாவூத் இப்ராகிம் போல வெளிநாட்டிலிருந்தபடி டெல்லியை ஆட்டிப்படைக்க அவர் கற்பனை செய்திருந்தார். அவருக்கு பாகிஸ்தான் தொடர்புகளும் கூட இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மொத்தக் கனவும் தற்போது தரைமட்டமாகி விட்டது.

பல்வேறு கொலை, கட்டப் பஞ்சாயத்து வழக்குகளில் இவருக்குத் தொடர்பு உள்ளது. இதுகுறித்து போலீஸார் தற்போது கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தவுள்ளனர். 

தீபக் எப்படி டெல்லியிலிருந்து தப்பித்தார் என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

நரேஷ் என்பவர்தான் தீபக் பாக்ஸர் டெல்லியை விட்டுத் தப்ப உதவியுள்ளார். ஹரியானா மாநிலம் சோனேபட் அருகே உள்ள அஜந்தாலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ். இவர் தனது சகோதரருடன் இணைந்து சாராய விற்பனையில்  ஈடுபட்டுள்ளார்.

நரேஷின் அண்ணன் மற்றும் மைத்துனரை கிருஷன் தாது என்ற காண்டிராக்ட் கில்லர் வெட்டிக் கொன்று விட்டார். இந்தத் தாக்குதலில்அதிர்ஷ்டவசமாக நரேஷ் தப்பி விட்டார். அதன் பின்னர் அவர் ஆஸ்திரேலியாவுக்குப்போய் விட்டார��  . அவரது மகன் சாகர் அமெரிக்காவில் இருக்கிறார். அண்ணனைக் கொன்ற தாதுவைக் கொலை செய்ய தீபக்கை நியமித்தார் நரேஷ். இதை மட்டும் தீபக் செய்து முடித்தால் அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதாகவும் உறுதி அளித்தார்.

அதற்கு தீபக், நான் உள்ளூரில் இருந்து செய்தால் சிக்கலாகி விடும். முதலில் அமெரிக்காவுக்குப் போய்விடுகிறேன். அங்கிருந்து தாதுவின் கதையை முடிக்கிறேன் என்று கூறவே, அதற்கு நரேஷ் ஒத்துக் கொண்டு, ரூ. 55 லட்சம் செலவும் செய்து மெக்சிகோவுக்கும் அனுப்பிவைத்தார்.

கனடாவிலிருந்து பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலாவைக் கொலை செய்துத போல அமெரிக்காவிலிருந்து தாதுவைக் கொலை செய்யப் போவதாக தீபக் கூறி வந்தாராம். இப்போது மொத்தமாக எல்லாம் பனால் ஆகி விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்