சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை பட பாணியில் மறு ஜென்ம கதையாக கங்கா தேவி திரைப்படம் உருவாக உள்ளதாம். ஹாரர், திரில்லர், காமெடி, என எல்லா அம்சங்களும் கலந்த இப்படம் தமிழ் புத்தாண்டு பிறந்ததும் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளதாம்.
நடிகர் ராகவா லாரன்ஸின் சீடரும், சண்டி முனி படத்தை இயக்கியவருமான மில்கா செல்வா கங்காதேவி படத்தை இயக்குகிறார். குமரன் சினிமா சார்பில், கே. என் பூமிநாதன் இப்படத்தை தயாரிக்கிறார்.சுரேஷ் ஒளிப்பதிவு செய்ய, வித்தியா சரண் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படம் ஹாரர், கிரைம், கலந்த திரில்லர் கதையாக உருவாக உள்ளதாம். மேலும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் மறு ஜென்ம கதையை போல இப்படத்தின் கதையும் அமைந்துள்ளதாம்.
கதாநாயகியை மையப்படுத்தி உருவாக இருக்கும் இப்படத்தில் நாயகி மஹானா நடிக்கிறார். இவர் ஏற்கனவே கரு மேகங்கள் கலைகின்றன, வரலாம் வா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர். அட்டு படத்தில் நடித்த நடிகர் ரிஷி ரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
நளினி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் முதல் முறையாக கணவன் மனைவியாக இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் சூப்பர் சுப்புராயன், மொட்ட ராஜேந்திரன், மற்றும் சாய் தீனா ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதப் பிறப்பில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பழனி அருகே உள்ள நெய்காரன் பட்டியில் துவங்க உள்ளதாம். இதனைத் தொடர்ந்து பாலக்காடு அரண்மனை, குற்றாலம், ஹைதராபாத், மற்றும் சென்னை ஆகிய பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். இப்படத்தின் ஸ்பெஷலாக ஒரு பாடல் காட்சிக்காக சென்னையில் மிகப் பிரம்மாண்ட செட்டு ஒன்று அமைக்கப்பட்டு வருகிறதாம்.
இப்படம் குறித்து இயக்குநர் மில்கா செல்வகுமார் கூறும்போது,
ஆணவக்கொலையை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. ஒரு ஜமீன் குடும்பத்திற்கு மருமகளாக வரப்போகும் பெண் அந்த வீட்டிற்குள் நுழைய, அடுத்தடுத்து பல பிரச்சினைகள் நடக்கின்றன. அதற்கு காரணம் யார் என்பதும் அதை ஜமீன் குடும்பத்தினரும் அந்த பெண்ணும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும் தான் இந்த படத்தின் கதை.
நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் 'கங்கா தேவி' படத்தில் ஹாரர், திரில்லிங், காமெடி என எல்லா அம்சங்களுமே கலந்து இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}