கணேச மூர்த்தியின் மறைவு எனது தலையில் இடி  விழுந்ததை போல் உள்ளது.. தழுதழுத்த வைகோ

Mar 28, 2024,07:18 PM IST

கோவை:  ஈரோடு எம் பி கணேச மூர்த்தியின் மறைவு எனது தலையில் இடி  விழுந்ததை போல உள்ளது.  திராவிட இயக்கத்திற்கு ஒரு பெரும் தூணாக கொங்கு மண்டலத்தின் சிங்கமாக இருந்த அவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்று  நா தழுதழுத்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


மதிமுக நிர்வாகிகளில் முக்கியமான கணேசமூர்த்தி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 76. 




2024ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவிற்கு திருச்சி மக்களவைத் தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததால் ஈரோடு எம்பி கணேச மூர்த்தி மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார். கடந்த 24ம் தேதி பூச்சி மருந்து குடித்து அவர் தற்கொலைக்கு முயன்றார். 


உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் இறந்தார். கணேச மூர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று கோவை விமானநிலையம் வந்த வைகோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டு கொடுப்பது என்ற நம்பிக்கையில் அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். சீட் அறிவித்த பிறகு கூட என்னிடம் பேசினார், நானும் அவரிடம் நன்கு பேசிக்கொண்டு தான் இருந்தேன்.  திராவிட இயக்கத்திற்கு ஒரு பெரும் தூணாக கொங்கு மண்டலத்தின் சிங்கமாக இருந்த அவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. 


அவ்வளவு பெரிய இடி தலையில் விழுந்ததைப் போல உணர்கிறேன். அவர் இந்த இயக்கத்திற்கும் பொதுமக்களுக்கும் பணியாற்றி இருக்கிறார். விவசாயிகளுக்காக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். மக்கள் நலனே தன்னுடைய கடமை என்று வாழ்ந்த கணேசமுர்த்தி, இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நான் நினைக்கவே இல்லை.


அவர் மறைந்தார் என்ற செய்தியை கேட்பதற்கு முன்பு மருந்து குடித்துவிட்டார் என்று சொன்னபோதே எனக்கு உயிர் எல்லாம் போய்விட்டது. எவ்வளவு துணிச்சலான மன உறுதி வாய்ந்தவர் அவரா இப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்று எண்ணினேன்.  கணேசமூர்த்திக்கு எம்பி சீட் கிடைக்காததால்தான் வருத்தத்தில் தற்கொலை முயற்சி செய்தார் என்று ஏடுகளில் செய்தி வெளியானது. அது ஒரு சதவீதம் கூட உண்மையல்ல. கணேசமூர்த்தியின் மகளையோ, மகனையோ, மாவட்ட செயலாளர்களையோ, கட்சி தோழர்களையோ கேட்டால் தெரியும். இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய கணேசமூர்த்தி எங்களை நட்டாத்தில் விட்டு விட்டு போவார் என்று நினைக்கவே இல்லை.


நானும் அவரும் சிறையில் 19 மாதம் காலம் இருந்தோம். அப்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. உடனே வெள்ளக்கோவில் பகுதியில் இருந்து மூன்று பஸ்களில் வேலூர் சிறைக்கே தோழர்கள் வந்து கண்ணீர் வடித்தனர். நான் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினேன். அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதையெல்லாம் அரசியல் நான் பலமுறை பார்த்திருக்கின்றேன் இதைப் பற்றி எல்லாம் நாம் வருத்தப்படக்கூடாது என்று சொல்லக்கூடிய மனநிலையில் தான் கணேசமூர்த்தி இருந்தார்.


மக்களவை தேர்தலில் கூட்டணியில் 2 சீட்டுகள் கிடைத்தால் நானும், துரையும் போட்டியிடுகிறோம் என்றார். ஒரு சீட் கிடைத்தால் துரையே நிற்கட்டும் என்றார். அதன் பிறகு அவர் மகிழ்ச்சியாக தான் இருந்தார். இத்தனை ஆண்டுகள் எந்த பதவியும் இல்லை என்று அவர் கவலைப்பட்டது கிடையாது. அப்படிப்பட்ட கணேசமூர்த்தி திராவிட இயக்க சரித்திரத்தில் கொங்கு மண்டலத்தில் அழியா புகழோடு ஒரு நட்சத்திரமாக என்றைக்கும் திகழ்வார். மதிமுக சார்பில் அவரது மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை கண்ணீரோடு தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்