ஜி20 மாநாடு.. டெல்லியில் மு.க.ஸ்டாலின்.. குடியரசுத் தலைவர் டின்னரில் பங்கேற்கிறார்!

Sep 09, 2023,03:54 PM IST
டெல்லி: ஜி 20 மாநாடு டெல்லியில் தொடங்கியுள்ளநிலையில் இன்று இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

ஜி 20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டின் தலைவர்களும் டெல்லியில் குவிந்துள்ளதால் டெல்லியில் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்களை இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக வரவேற்றார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கும் ,
மாநில முதல்வர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும்  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில்
இன்று இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று இரவு விருந்தில் பங்கேற்கும் அவர், அதை முடித்துக் கொண்டு நாளை பிற்பகல் சென்னை திரும்புவார்.

சமீபத்திய செய்திகள்

news

உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

news

திருச்சி மாவட்டத்திற்கு ஏப்., 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர்

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

news

இரத்தக்களறி (சிறுகதை)

news

4 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.520 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்