டெல்லி: டெல்லியில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டுக்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது.
உலகின் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் எல்லாம் நாளைய மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதலால் உலகின் கவனம் முழுக்க டெல்லியின் பக்கம் திரும்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர், இங்கிலாந்து பிரதமர் ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகி விட்டது. பைடன் கிளம்பியும் விட்டார்.
ரிஷி சுனாக்குக்கு இதுதான் பிரதமரான பிறகு முதல் இந்தியப் பயணமாகும். அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ், ஜெர்மனி நாட்டு சான்சலர் ஓலப் ஸ்கால்ஸ் ஆகியோர் வருகிறார்கள்.
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசா, துருக்கி அதிபர் ரிசெப் தய்யீப் எர்டாகன் ஆகியோரும் ஜி20 மாநாட்டுக்கு வருகிறார்கள்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்சஸ், மெக்சிகோ அதிபர் ஆண்டிரஸ் மானுவல் லோபஸ் ஓப்ராடர் ஆகியோர் இந்த மாநாட்டுக்கு வராத முக்கியத் தலைவர்கள் ஆவர்.
ஜி20 உறுப்பு நாடுகள் தவிர வங்கதேசம், நெதர்லாந்து, நைஜீரியா, எகிப்து, மொரீஷியஸ், ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்
காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டை கண்டித்து.. தீர்மானங்களை கொண்டு வாங்க பார்ப்போம்..எடப்பாடி பழனிச்சாமி சவால்
அமித்ஷா பிரஸ்மீட் மேடையில் திடீர் Change.. டிஜிட்டல் பேனரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெயர் நீக்கம்
திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்... புதிதாக திருச்சி சிவா நியமனம்!
அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக தலைவர்கள்.. தேமுதிகவுக்கு டைம் கொடுக்க மறுத்ததா பாஜக?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 11, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}